/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆறு பேரிடம் ரூ. 4.57 லட்சம் 'அபேஸ்' ஆறு பேரிடம் ரூ. 4.57 லட்சம் 'அபேஸ்'
ஆறு பேரிடம் ரூ. 4.57 லட்சம் 'அபேஸ்'
ஆறு பேரிடம் ரூ. 4.57 லட்சம் 'அபேஸ்'
ஆறு பேரிடம் ரூ. 4.57 லட்சம் 'அபேஸ்'
ADDED : ஜூன் 08, 2025 10:23 PM
புதுச்சேரி : போலி பங்குச்சந்தையில் முதலீடு செய்து புதுச்சேரி நபர், ரூ.3.92 லட்சம் இழந்துள்ளார்.
புதுச்சேரி வாழைக்குளத்தை சேர்ந்த நபரை, மர்ம நபர் ஒருவர் வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைத்துள்ளார். அதில், பங்கு சந்தையில் முதலீடு செய்து, எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி, மர்ம நபர் அனுப்பிய பங்குசந்தை தொடர்பான லிங்கில் 3 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார்.
அரியாங்குப்பத்தை சேர்ந்த நபர் பேஸ்புக்கில் வந்த விளம்பரத்தை நம்பி, 33 ஆயிரத்து 700 ரூபாய்க்கு பைக் ஆர்டர் செய்து ஏமாந்தார். இதேபோல், புதுச்சேரியை சேர்ந்த நபர் 7 ஆயிரத்து 200, வில்லினுாரை சேர்ந்தவர் 15 ஆயிரம், புதுச்சேரியை சேர்ந்தவர் 4 ஆயிரத்து 250, லாஸ்பேட்டையை சேர்ந்தவர் 5 ஆயிரத்து 700 என, 6 பேர் மோசடி கும்பலிடம் 4 லட்சத்து 57 ஆயிரத்து 850 ரூபாய் இழந்துள்ளனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.