/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சினிமா கேரவன், சுற்றுலா வேன்களுக்கு... தனி சாலை வரி; புதுச்சேரி போக்குவரத்துத் துறை அதிரடிசினிமா கேரவன், சுற்றுலா வேன்களுக்கு... தனி சாலை வரி; புதுச்சேரி போக்குவரத்துத் துறை அதிரடி
சினிமா கேரவன், சுற்றுலா வேன்களுக்கு... தனி சாலை வரி; புதுச்சேரி போக்குவரத்துத் துறை அதிரடி
சினிமா கேரவன், சுற்றுலா வேன்களுக்கு... தனி சாலை வரி; புதுச்சேரி போக்குவரத்துத் துறை அதிரடி
சினிமா கேரவன், சுற்றுலா வேன்களுக்கு... தனி சாலை வரி; புதுச்சேரி போக்குவரத்துத் துறை அதிரடி
ADDED : ஜூன் 08, 2025 10:25 PM

புதுச்சேரி: புதுச்சேரிக்கு சினிமா, விளம்பர சூட்டிங்கிற்கு வரும் கேரவன்கள், சுற்றுலாப் பயணிகள் வரும் சொகுசு கேம்பர் வாகனங்களுக்கு சாலை வரி விதிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு கலாசாரம் தாக்கம் கொண்ட புதுச்சேரியில் ஆண்டு முழுதும் அனைத்து மொழிகளின் படங்களின் சூட்டிங் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல் விளம்பர சூட்டிங்களும் அதிக அளவில் நடத்தப்படுகிறது.
பட பிடிப்பிற்காக வரும் சினிமா நட்சரத்திரங்களுக்காக சொகுசு வசதிகள் கொண்ட கேரவன்கள் கொண்டு வரப்படுகின்றன. இந்த கேரவன்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வரும் சொகுசு கேம்பர் வேன்களை தற்போது தனி சாலை வரி கட்டமைப்பிற்குள் புதுச்சேரி போக்குவரத்து துறை கொண்டு வந்து வரி விதித்துள்ளது.
பொது சேவை, ஒப்பந்தம், போக்குவரத்து என்ற அடிப்படையில் இயக்கப்படும் கேரவன், கேம்பர் வேன்கள் அனைத்துமே இந்த சாலை வரி கட்டமைப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. புதுச்சேரி மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டு ஓடும் இலகு மற்றும் நடுத்தர ரக கேரவன், கேம்பர் வாகனங்களுக்கு ஆண்டு வரியாக 32 ஆயிரம் ரூபாய், கனரக வாகனங்களுக்கு ஆண்டு வரியாக 48 ஆயிரம் ரூபாய் சாலை வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் இருந்து வரும் கேரவன், கேம்பர் வேன்கள் தற்காலிக வரி கட்டி புதுச்சேரியில் சினிமா, விளம்பர சூட்டிங்கிற்கு கொண்டு வரலாம். இலகு, நடுத்தர கேரவன், கேம்பர் வேன்கள் 3 நாட்கள் சினிமா, விளம்பர சூட்டிங் எடுக்க 860 ரூபாய், கனரக வாகனங்கள் 1,340 ரூபாய் தற்காலிக சாலை வரி செலுத்தி அனுமதி பெற வேண்டும். 7 நாட்களுக்கு சூட்டிங் எடுக்க இலகு நடுத்தர ரக வாகனங்கள் ரூ.1,800, கனரக வாகனங்கள் 2,800 ரூபாய் வரி கட்ட வேண்டும். 30 நாட்கள் சூட்டிங் எடுக்க இலகு, நடுத்தர ரக வாகனங்கள் ரூ. 4,200, கனரக வாகனங்கள் ரூ.8,800 செலுத்த வேண்டும் என, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
என்ன காரணம்
சினிமா, விளம்பர சூட்டிற்கு வரும் கேரவன், கேம்பர் வேன்களை பொருத்தவரை சாலை வரியில் இதுவரை தெளிவான விதிமுறை இல்லை. தற்போது, கேரவன்கள், கேம்பர் வேன்கள் இதுவரை போக்குவரத்து அல்லது பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்டு சொந்த வாகனங்கள் போன்று சாலை வரி விதிக்கப்படுகின்றன. 10 லட்சத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் என்றால் அதன் மதிப்பில் 7 சதவீதம் ஆயுட்கால சாலை வரி கட்டப்படுகிறது. 10 லட்சத்திற்கு கீழ் என்றால் அதன் மதிப்பில் 4 சதவீதம் ஆயுட் கால சாலை வரி கட்டப்படுகிறது.
கேரவன்கள், கேம்பர் வேன்களை தங்களுடைய சொந்த வாகனமாக பயன்படுத்துவது போன்று கணக்கு காட்டி இப்படி வரி ஏய்ப்பு செய்கின்றனர். ஆனால் நடைமுறையில் கேரவன்கள், வேம்பர் வேன்களை சூட்டிங்காக உள்வாடகை விட்டு சாம்பதிக்கின்றனர். இதையடுத்தே மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள கேரவன்கள், கேம்பர் வேன்கள் ஆண்டு சாலை வரி கட்டமைப்பிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இதேபோன்று தான் தமிழகம் உள்பட பிற மாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு வரும் கேரவன், கேம்பர் வேன்கள் சொந்த வாகனங்கள் போன்று எடுத்து வந்து திரும்பி எடுத்து செல்கின்றனர்.
எந்த சாலை வரியும் புதுச்சேரிக்கு கட்டுவதில்லை. இதன் காரணமாக பிற மாநிலங்களில் இருந்து வரும் கேரவன், கேம்பர் வேன்களுக்கு சூட்டிங் நாட்களுக்கு ஏற்ப சாலை வரி கட்டமைப்பிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.