/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சமக்ரா சிக் ஷா திட்டத்தின் மூலம் 322 பள்ளிகளுக்கு ரூ. 1.60 கோடி மானியம் சமக்ரா சிக் ஷா திட்டத்தின் மூலம் 322 பள்ளிகளுக்கு ரூ. 1.60 கோடி மானியம்
சமக்ரா சிக் ஷா திட்டத்தின் மூலம் 322 பள்ளிகளுக்கு ரூ. 1.60 கோடி மானியம்
சமக்ரா சிக் ஷா திட்டத்தின் மூலம் 322 பள்ளிகளுக்கு ரூ. 1.60 கோடி மானியம்
சமக்ரா சிக் ஷா திட்டத்தின் மூலம் 322 பள்ளிகளுக்கு ரூ. 1.60 கோடி மானியம்
ADDED : ஜூன் 03, 2025 12:12 AM
புதுச்சேரி: சமக்ரா சிக் ஷா திட்டத்தின் மூலம், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 322 பள்ளிகளுக்கு, 1.60 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
சமக்ரா சிக் ஷா திட்டத்தின் கீழ், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின்படி, 30 மாணவர்களை வரை சேர்க்கும் பள்ளிகளுக்கு 10 ஆயிரம் ரூபாயும், 100 மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. மேலும், 250 மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளுக்கு 50 ஆயிரமும், ஆயிரம் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளுக்கு 75 ஆயிரமும், அதற்கு மேல் சேர்க்கும் பள்ளிகளுக்கு 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது.
அதன்படி, 2025-26ம் கல்வியாண்டில், ஆரம்ப நிலை பிரிவில், புதுச்சேரியில், 132, காரைக்காலில் 47, மாகி 10, ஏனாம் 15 என 204 பள்ளிகளுக்கும், இடைநிலை பிரிவில், புதுச்சேரியில், 82, காரைக்காலில், 24, மாகி 5, ஏனாமில் 7, என மொத்தம் 118 பள்ளிகளுக்கும் கூட்டு பள்ளி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 322 பள்ளிகளுக்கு 1 கோடியே 60 லட்சத்து, 95 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை, பள்ளி வளர்ச்சிக்கும் பயன்படுத்தலாம். இந்த நிதியை பள்ளி மேலாண்மை குழு கண்காணித்து செலவிடுவதை உறுதி செய்யும் என பள்ளி கல்வித்துறை, சமக்ரா சிக் ஷா திட்ட இயக்குனர் எழில்கல்பனா தெரிவித்துள்ளது.