/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கிராம திட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை கிராம திட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை
கிராம திட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை
கிராம திட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை
கிராம திட்ட ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை
ADDED : ஜூன் 03, 2025 02:02 AM
புதுச்சேரி: வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் கிராம திட்ட ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய புதுச்சேரி கிராம திட்ட ஊழியர்கள் சங்கம் முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சங்க செயலாளர் கருணை பிரகாசம் விடுத்துள்ள அறிக்கை:
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், புதுச்சேரியில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் கீழ் 98 கிராம பஞ்சாயத்துகளில் பணி செய்யும் கிராம திட்ட ஊழியர்கள், 6 தகவல் பதிவேற்றுபவர்கள்,10 தொழில்நுட்ப உதவியாளர்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பணி நியமனம் பெற்றனர். சம்பளம் ரூ.2,000 கொடுத்த நிலையில், பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு கிராம திட்ட ஊழியர்களுக்கு ரூ. 20 ஆயிரமும், தகவல் பதிவேற்றபவர்களுக்கு ரூ. 25 ஆயிரமும், தொழில் நுட்ப உதவியாளர்களுக்கு ரூ.26 ஆயிரம் உயரத்தி வழங்கப்படுகிறது. ஆனால் பனிநிரந்தரம் செய்யப்படவில்லை.
ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு பணிநிரந்தரம் செய்யவும், இ.பி.எப்., கொகையை செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில நிதியில் இருந்து ரூ. 2 கோடி ஒதுக்கிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.