பாகூரில் கூரை வீடு எரிந்து சாம்பல்
பாகூரில் கூரை வீடு எரிந்து சாம்பல்
பாகூரில் கூரை வீடு எரிந்து சாம்பல்
ADDED : ஜன 05, 2024 12:40 AM

பாகூர் : பாகூரில் கூரை வீடு தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பாகூர், தாமரைக்குளம், நத்தம் முதல் தெருவை சேர்ந்தவர் மாணிக்கம் 75; தனியாக வசிக்கும் இவர், தனது கூரை வீட்டின் ஒரு பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது, கூரை வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றனர். தகவலறிந்த பாகூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் வீடு முழுதும் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு 1 லட்சம் ரூபாயாகும். தீ விபத்து குறித்து பாகூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.