வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு
வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு
வருவாய் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு
ADDED : ஜூன் 12, 2025 07:36 AM

நெட்டப்பாக்கம் : கரியமாணிக்கம் கிராமத்தில் ரூ. 32 லட்சம் மதிப்பில் வி.ஏ.ஓ., மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு, பாகூர் தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார். துணை சபாநாயகர் ராஜவேலு புதிய வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நெட்டப்பாக்கம், பண்டசோழநல்லுார், கரியமாணிக்கம், சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த வி.ஏ.ஓ.,க்கள் கலந்து கொண்டனர்.