/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுவரை இடித்து சேதப்படுத்திய பக்கத்து வீட்டுகாரர் மீது வழக்கு சுவரை இடித்து சேதப்படுத்திய பக்கத்து வீட்டுகாரர் மீது வழக்கு
சுவரை இடித்து சேதப்படுத்திய பக்கத்து வீட்டுகாரர் மீது வழக்கு
சுவரை இடித்து சேதப்படுத்திய பக்கத்து வீட்டுகாரர் மீது வழக்கு
சுவரை இடித்து சேதப்படுத்திய பக்கத்து வீட்டுகாரர் மீது வழக்கு
ADDED : ஜூன் 12, 2025 11:12 PM
புதுச்சேரி: வீட்டு சுவரை சேதப்படுத்தியவர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி கொம்பாக்கம் குப்பம்பேட் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் 46, கூலி தொழிலாளி. இவர் புதியதாக வீடு கட்டி வருகிறார். சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மாடி வீட்டில் புதிதாக சுவர் எழுப்பி வைத்து இருந்ததை, பக்கத்து வீட்டில் வசிக்கும் திருமூர்த்தி என்பவர் கையால் இடித்து தள்ளிக் கொண்டிருந்தார். சத்தம் கேட்டு ரமேஷ் வெளியே வந்து பார்த்தபோது, திருமூர்த்தி வீட்டிக்குள் ஓடியுள்ளார்.
இது குறித்து ரமேஷ் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் திருமூர்த்தி மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.