/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ உதவியாளர் 2ம் நிலை தேர்விற்கு கூடுதல் ஒர்க் ஷீட் வைக்க கோரிக்கை உதவியாளர் 2ம் நிலை தேர்விற்கு கூடுதல் ஒர்க் ஷீட் வைக்க கோரிக்கை
உதவியாளர் 2ம் நிலை தேர்விற்கு கூடுதல் ஒர்க் ஷீட் வைக்க கோரிக்கை
உதவியாளர் 2ம் நிலை தேர்விற்கு கூடுதல் ஒர்க் ஷீட் வைக்க கோரிக்கை
உதவியாளர் 2ம் நிலை தேர்விற்கு கூடுதல் ஒர்க் ஷீட் வைக்க கோரிக்கை
ADDED : மே 30, 2025 04:34 AM
புதுச்சேரி; உதவியார் பணிக்கான இரண்டாம் நிலை தேர்விற்கு வினாத்தாளுடன் கூடுதல் ஒர்க் ஷீட் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 256 உதவியாளர் பணியிடங்கள் போட்டி தீர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. இதற்கான முதற்கட்ட தேர்வு கடந்த ஏப்ரல் 22ம் தேதி நிர்வாக சீர்திருத்தத்துறை நடத்தியது.
இத்தேர்வில், வினாக்காளுக்கு கணக்குகள் போட்டு பார்ப்பதற்காக, வினாத்தாளுடன் ஒர்க் ஷீட் (ரப் பேப்பர்) ஒன்று மட்டுமே வைக்கப்பட்டிருந்தது. அதில் கணிதம் மற்றும் பகுத்தறிவு திறன் பகுதிகளுக்கான 50 கேள்விகளுக்கு ஒர்க் அவுட் செய்ய வேண்டியுள்ளது. ஆனால், வினாத்தாளுடன் ஒரே ஒரு ஒர்க் ஷீட் மட்டும் வைத்திருந்ததால் தேர்வர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான இரண்டாம் நிலைதேர்வு வரும் ஜூன் 22ம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்விலும், 50 மதிப்பெண்ணிற்கு ஒர்க் அவுட் செய்ய வேண்டியுள்ளது. அதனால், இந்த தேர்விலாவது வினாத்தாளுடன் கூடுதல் ஒர்க் ஷீட் வைக்க நிர்வாக சீர்திருத்தத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரண்டாம் நிலை தேர்விற்கு தயாராகி வரும் தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.