Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/136 பாரம்பரிய கட்டடங்களை கூடுதலாக சேர்க்க... பரிந்துரை; பட்டியலை இறுதி செய்வதில் அரசு மும்முரம்

136 பாரம்பரிய கட்டடங்களை கூடுதலாக சேர்க்க... பரிந்துரை; பட்டியலை இறுதி செய்வதில் அரசு மும்முரம்

136 பாரம்பரிய கட்டடங்களை கூடுதலாக சேர்க்க... பரிந்துரை; பட்டியலை இறுதி செய்வதில் அரசு மும்முரம்

136 பாரம்பரிய கட்டடங்களை கூடுதலாக சேர்க்க... பரிந்துரை; பட்டியலை இறுதி செய்வதில் அரசு மும்முரம்

ADDED : ஜூன் 25, 2024 04:43 AM


Google News
புதுச்சேரி, : புதுச்சேரி பாரம்பரிய நகர கட்டடங்கள் பட்டியலில் கூடுதலாக136 கட்டடங்களை சேர்க்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கடற்கரைச் சாலை, ஒயிட் டவுன் பகுதிகளுக்கு சென்றால் ஏராளமான பாரம்பரியக் கட்டடங்களைத் பிரமிப்பாக காணமுடியும்.

இந்த பாரம்பரிய கட்டடங்களைப் பார்வையிடவே தற்போது ஏராளமானோர் புதுச்சேரிக்கு வெளியூர், வெளிநாடுகளில் இருந்து வருகின்றனர்.

புதுச்சேரியை யுனொஸ்கோ பாரம்பரிய நகர பட்டியலில் இடம் பெற செய்யும் முயற்சியாக, 114 பாரம்பரிய கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டு கடந்த 2022ம் ஆண்டு அறிவிக் கப்பட்டது.

அதில், விடுபட்ட பாரம்பரிய கட்டடங்களை இரண்டாம் கட்டமாக சேர்த்து அறிவிக்க அரசு முடிவு செய்தது.

இந்த பட்டியல் தயாரிப்பினை இன்டெக், நகர அமைப்பு குழும் இணைந்து முன்னெடுத்து வந்தன. இப்போது அனைத்து பணிகளும் முடிந்து 136 பாரம்பரிய கட்டடங்களை சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்த பழமையான கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள், தனியார் கட்டடங்களும் இடம் பெற்றுள்ளது. இந்த பட்டியலை அரசு இறுதி செய்து இரண்டாவது பாரம்பரிய கட்டடங்கள் பட்டியலை வெளியிடும்.

பாரம்பரிய பட்டியலை தயாரிக்கும்போது கிரேடு 2 ஏ, கிரேடு 2 பி, கிரேடு 3 என்று வகைப்படுத்தப்படுகின்றன. கிரேடு 2 பட்டியலில் இடம் பிடித்துள்ள பாரம்பரிய கட்டடங்களில் அனுமதி பெற்று புதிய கட்டடம் கட்டலாம்.

கிரேடு 2 பி பாரம்பரிய கட்டடங்களிலும் அனுமதி பெற்று, செங்குத்தாவும், கிடைமட்டமாகவும் கட்டுமானத்தை மேற்கொள்ள முடியும்.

அடுத்துள்ள கிரேடு 3 பட்டியலில் முக்கியத்துவம் வாய்ந்த கட்டடகலை இல்லையெனில் அனுமதி பெற்று இடிக்கலாம். இதன்படி கிரேடு 2 மற்றும் கிரேடு 2 பி பட்டியலில் கூடுதலாக 28 கட்டடங்களை தனியாக சேர்க்கவும் தற்போது ஆய்வு பணிகள் விறுவிறுப்பாக இண்டாக் மூலம் நடந்து வருகின்றது.

தப்பியது இது தான்


புதுச்சேரியில் கடந்த 1995ம் ஆண்டு இன்டெக் கணக்கெடுத்தபோது 1807 பாரம்பரிய கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டன. இருப்பினும் இது 2005ம் ஆண்டு கணக்கெடுத்தபோது 1,173 ஆக குறைந்திருந்தது. தொடர்ந்து 2008ம் ஆண்டு மீண்டும் சர்வே செய்து, சில பாரம்பரிய கட்டடங்கள் அடையாளம் காணப்பட்டதால், பாரம்பரிய கட்டடங்களின் எண்ணிக்கை 1,184 ஆக உயர்ந்தது.

கடந்த 2010ம் ஆண்டு மத்திய ஊரக அமைச்சகம் வகுத்த வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மீண்டும் பாரம்பரிய கட்டடங்களை பகுத்தாய்வு செய்தபோது, 980 கட்டடங்கள் மட்டுமே பட்டியலிடப்பட்டு தேறியது.

கடைசியாக கடந்த 2013ம் ஆண்டு இண்டாக் சர்வே செய்தபோது, இவற்றில் 488 பாரம்பரிய கட்டடங்கள் மட்டுமே தேறியது குறிப்பிடதக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us