/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குடிநீரின் தரம் குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வு குடிநீரின் தரம் குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வு
குடிநீரின் தரம் குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வு
குடிநீரின் தரம் குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வு
குடிநீரின் தரம் குறித்து அமைச்சர் தலைமையில் ஆய்வு
ADDED : ஜூன் 25, 2024 04:44 AM

புதுச்சேரி : பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் குடிநீர் வினியோகம் மற்றும் கழிவு நீர் வெளியேற்றம் தொடர்பான ஆய்வு கூட்டம் சட்டசபை நடந்தது.
கூட்டத்தில், தலைமை செயலர், நிதி செயலர், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர், செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.
ஆய்வு கூட்டத்தில் புதுச்சேரியில் உள்ள வீதிகளில் மொத்தம் 1,300 கழிவுநீர் தொட்டிகள் உள்ளன.
இந்த கழிவுநீர் குழாய்கள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளில் ஏற்படும் குறைபாடுகளை உடனுக்குடன் கண்டறிந்து சரிசெய்ய ரூ.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டு 6 சூப்பர் சக்கர் மெஷின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இக்கருவி மூலம் நாள் ஒன்றுக்கு 10 கழிவுநீர் தொட்டிகள் சுத்தம் செய்யப்படும்.
அதேபோல், பொதுப்பணித்துறை பொது சுகாதாரப் பிரிவு மூலம் பாரமரிக்கப்பட்டு வரும் 68 மேல்நிலைத் தொட்டிகள் கடந்த 17 ம் தேதி எடுத்த ஆய்வின்படி எந்த ஒரு மேல்நிலை தொட்டியிலும் டி.டி.எஸ்., அளவு 2 ஆயிரம் தாண்டவில்லை.
ஒரே ஒரு தொட்டியில் மட்டும் டி.டி.எஸ்., 2 ஆயிரம் உறுதி செய்யப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை மூலம் குடிநீர் தரத்தை 750 டி.டி.எஸ்., வரை கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தரமான குடிநீர் வழங்க பொதுப்பணித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.