ADDED : ஜன 22, 2024 06:15 AM

புதுச்சேரி : புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில் ராதா மாதவ திருக்கல்யாணம் நடந்தது.
புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், மார்கழி மாதம் 29 நாட்களும், பண்டைய கால வழக்கப்படி பஜனை நடந்தது. அதன் தொடர்ச்சியாக, ராதா மாதவ திருக்கல்யாணம், இ.சி.ஆர்., விவேகானந்தா பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது.இதையொட்டி, நேற்று முன்தினம், சிவதாஸ் பாகவதர் தலைமையில் அஷ்டபதிகள் பாடப்பட்டு பூஜைகள் நடந்தது.
நேற்று உடையாளூர் கலைமாமணி கல்யாணராம பாகவதரின், சம்ப்ரதாய பஜனைகள் பாடி திருக்கல்யாண வைபவம் நடந்தது.நிகழ்ச்சியில் பங்கேற்ற கல்யாணராம பாகவதருக்கு, புதுச்சேரி தர்ம சம்ரக் ஷண சமிதி சார்பில், சம்பிரதாய பஜன் சாம்ராட் என்ற பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


