/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தர வரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம்... முன்னேற்றம்; 'நாக்' அங்கீகாரத்தை தொடர்ந்து அடுத்த சாதனை தர வரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம்... முன்னேற்றம்; 'நாக்' அங்கீகாரத்தை தொடர்ந்து அடுத்த சாதனை
தர வரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம்... முன்னேற்றம்; 'நாக்' அங்கீகாரத்தை தொடர்ந்து அடுத்த சாதனை
தர வரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம்... முன்னேற்றம்; 'நாக்' அங்கீகாரத்தை தொடர்ந்து அடுத்த சாதனை
தர வரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம்... முன்னேற்றம்; 'நாக்' அங்கீகாரத்தை தொடர்ந்து அடுத்த சாதனை
ADDED : ஜூன் 30, 2025 02:59 AM

புதுச்சேரி : உலக அளவிலான டைம்ஸ் தரவரிசை பட்டியலில் புதுச்சேரி பல்கலைக்கழகம் முன்னேற்றம் கண்டுள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டில் 1985ம் ஆண்டு முதல் இயங்கி வரும் மத்திய பல்கலைக்கழகத்தின் கீழ் காரைக்கால், மாகே, ஏனாம், அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத் தீவுகளில் மருத்துவம், பொறியியல், கலை அறிவியல் என 59 கல்லுாரிகள் இணைப்புக் கல்லுாரிகளாக உள்ளன. இவற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பல்கலைக்கழகம் தேசிய அளவில் மட்டுமின்றி தற்போது உலக கல்வி நிறுவனங்கள் வரிசையிலும் போட்டியிட்டு கவனத்தை ஈர்த்து வருகிறது.
அண்மையில் நாக் கமிட்டியின் ஏ பிளஸ் கிரேடினை பிடித்து அசத்திய பல்கலைக்கழகம் தற்போது உலக அளவிலான டைம்ஸ் தரவரிசையிலும் முன்னேற்றம் அடைந்துள்ளது. உலக பல்கலைக் கழக தரவரிசையில் புகழ்பெற்ற டைம்ஸ் உயர் கல்வி, ஐக்கிய நாடுகளின் நிலையான வளர்ச்சி இலக்குகளின் அடிப்படையில், பல்கலைக் கழகங்களை மதிப்பீடு செய்து, அதன் 2025 தரவரிசைகளை சமீபத்தில் வெளியிட்டது.
இதில் இந்தியாவிலிருந்து 135 பல்கலைக் கழகங்ககள் உட்பட 130க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள 2526 பல்கலைக் கழகங்கள் பங்கேற்றன. புதுச்சேரி பல்கலைக்கழகம் இந்த போட்டியில் இறங்கியது. புதுச்சேரி பல்கலைக்கழகம் சமீபத்திய தரவரிசையில் கடந்த ஆண்டின் 64.5- 69.8 மதிப்பெண் வரம்பை விட முன்னேறி, இந்த ஆண்டு 65.6-70.2 மதிப்பெண் அளவில் 601--800 தரவரிசை வரம்பில் உயர்வடைந்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் சிறந்த கல்வி நிறுவனமாக பல்கலைக்கழகம் உருவெடுத்துள்ளது.
இந்த தரவரிசை பட்டியலில் பல்கலைக்கழகம் முக்கியமான தொலைநோக்கு பார்வைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது. குறிப்பாக, நிலத்தில் உயிர்கள் பாதுகாப்பு குறிக்கோளில் 101--200, வறுமையின்மை குறிக்கோளில் 301--400 மற்றும் பெண்கள் சமத்துவம் குறிக்கோளில் 401--600 மதிப்பெண்ணை பெற்றுள்ளது.
உலகளாவிய தரவரிசை பட்டியலில் சிறப்பிடம் குறித்து புதுச்சேரி பல்கலைக் கழக துணைவேந்தர் பிரகாஷ் பாபு கூறியதாவது:
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது அனைத்து அளவுகோள்களிலும் முக்கியமான முன்னேற்றத்தை கண்டுள்ளது. குறிப்பாக நிலைத்தன்மை, பன்னாட்டு ஆராய்ச்சி இணைப்பு, மற்றும் பணியிடத்துக்கு ஒரு பேராசிரியருக்கான மேற்கோள்கள் ஆகிய தரவுகளின் அடிப்படையில் உலகளவில் 545வது இடத்தைப் பெற்றுள்ளது. இது பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்பை பிரதிபலிக்கிறது.
மேலும், கியூ.எஸ்., தரவரிசையில் உலகளவில் 820வது இடத்தையும், இந்திய அளவில் 29வது இடத்தையும் பெற்றுள்ளது. இது கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி. இதன் மூலம் எதிர்காலத்தில் உலக அளவில் சிறந்த கல்வி நிறுவனமாக புதுச்சேரி பல்கலைக்கழகம் திகழும்' என்றார்.