/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரி பல்கலை.,அறிவிப்பால் 10 ஆயிரம் மாணவர்களுக்கு... நெருக்கடி; மீண்டும் புதிதாக படித்து தேர்வு எழுத பாடத்திட்டம் வெளியீடுபுதுச்சேரி பல்கலை.,அறிவிப்பால் 10 ஆயிரம் மாணவர்களுக்கு... நெருக்கடி; மீண்டும் புதிதாக படித்து தேர்வு எழுத பாடத்திட்டம் வெளியீடு
புதுச்சேரி பல்கலை.,அறிவிப்பால் 10 ஆயிரம் மாணவர்களுக்கு... நெருக்கடி; மீண்டும் புதிதாக படித்து தேர்வு எழுத பாடத்திட்டம் வெளியீடு
புதுச்சேரி பல்கலை.,அறிவிப்பால் 10 ஆயிரம் மாணவர்களுக்கு... நெருக்கடி; மீண்டும் புதிதாக படித்து தேர்வு எழுத பாடத்திட்டம் வெளியீடு
புதுச்சேரி பல்கலை.,அறிவிப்பால் 10 ஆயிரம் மாணவர்களுக்கு... நெருக்கடி; மீண்டும் புதிதாக படித்து தேர்வு எழுத பாடத்திட்டம் வெளியீடு
ADDED : ஜன 29, 2024 04:32 AM

நாட்டில் உள்ள அனைத்து மத்திய பல்கலைக்கழகங்களும் நிகழ் கல்வியாண்டில்(2023-24) தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்படுகிறது.அதன்படி புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகம்,அதை சார்ந்த 101 இணைப்பு கல்லுாரிகளில் தேசிய கல்வி கொள்கை செயல்படுத்தப்படும்.இதில் தாய்மொழி கல்வி கற்க முக்கியத்துவம் என கடந்த ஜூலை மாதம் புதுச்சேரி பல்கலைக்கழகம் அறிவித்தது.
ஆனால்,பல மாதங்கள் உருண்டோடியும் புதிய கல்வி கொள்கையின் கீழ் பாடங்கள் நடத்தப்படவில்லை.
பழைய பாடத்திட்டன் கீழ் தான் பல்கலைக்கழக இணைப்பு கல்லுாரிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.
புதிய கல்வி கொள்கை நடப்பாண்டு உண்டா அல்லது இல்லையா என தெரியாமல் இணைப்பு கல்லுாரிகளில் குழப்பத்தில் பாடங்கள் நடத்தப்பட்டு வந்தன.
குறிப்பாக முதலாமாண்டு இளநிலை மாணவர்களுக்கு புதிய கல்வி கொள்கையின்படி இல்லாமல்,பழைய பாடத்தின்படி முதல் பருவத்திற்கான பாடங்கள் போதிக்கப்பட்டன.
இம்மாணவர்களுக்கு ஜனவரி மாதத்தில் இருந்து முதல் பருவ தேர்வு நடக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
அதேபோல் அறிவியல் பயிலும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வும் நடத்தப்பட்டது.
இதன்படி முதலாமாண்டு தேர்வினை எழுத மாணவ மாணவிகள் தயராகி வந்தனர்.திடீரென அந்த முதலாமாண்டு பருவ தேர்வு அட்டவணையை விலக்கிகொண்ட பல்கலைக்கழக நிர்வாகம், ரத்து செய்யப்பட்ட முதல் பருவ தேர்வு எப்போது நடத்தும் என்ற அறிவிப்பினை வெளிடவில்லை.
இதற்கிடையில் முதலாமாண்டு மாணவர்களின் தலையில் இடியை இறக்கும் வகையில்,பல்கலைக்கழக நிர்வாகம் தற்போது புதிய அறிவிப்பினை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றது. ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் வரை ஏற்கனவே இணைப்பு கல்லுாரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பாடத்திட்டத்தினை மறந்துவிட்டு,புதிய கல்விகொள்கையின்படி புதிய பாடத்திட்டத்தினை புதிதாக நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.அதனை பல்கலைக்கழக இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது.
இதனால் இதுவரை படித்த பாடங்களுக்கு பதிலாக புதிதாக படிக்க வேண்டிய நிலைக்கு புதுச்சேரி இணைப்பு கல்லுாரிகளில் பயிலும் 10 ஆயிரம் மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
முதலாமாண்டு மாணவர்கள் இதுவரை படித்ததை முற்றிலுமாக மறந்துவிட்டு இனி அடுத்த மூன்று மாதத்திற்கு புதிதாக படித்து,தேர்வு எழுத வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மீண்டும் முதலில் இருந்து படிக்க வேண்டும்என மாணவர்களும் மனம் குமுறி வருகின்றனர்.
பல்கலைக்கழகத்தின் இந்த முடிவிற்கு இணைப்பு பேராசிரியர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இது தொடர்பாக அவர்கள் பல்கலைக்கழகத்திடம் எதிர்ப்பினை பதிவு செய்துள்ளனர்.
இணைப்பு கல்லுாரிகளில் புதிய கல்விக்கொள்கையினை அமல்படுத்துவது தப்பில்லை.
ஆனால் பாடத்திட்டங்களை வரையறை செய்து கல்வியாண்டு துவக்கத்தில் இருந்து ஆரம்பித்து இருக்க வேண்டும்.கடந்த மூன்று மாதமாக முழுமையாக பாடங்களை நடத்தி, மாணவர்களையும் தேர்வுக்கு தயராக வைத்துவிட்டு,இப்போது அவை செல்லாது என அறிவிப்பது என்ன விதத்தில் சரி என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அனைத்து பாடப் பிரிவுகளுக்கு முறைப்படி பாடதிட்டத்தை வரையறை செய்து வெளியிட்ட பிறகு, அடுத்தாண்டு துவக்கத்தில் இருந்து முறைப்படி புதிய கல்விகொள்கையின்படி தேர்வு நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இவ்விஷயத்தில் கவர்னர் தமிழிசை,முதல்வர் ரங்கசாமி,கல்வி அமைச்சர் நமச்சிவாயம் நேரடியாகதலையிட்டு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.