/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் 20 தொகுதியில் போட்டியிட வேண்டும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி புதுச்சேரியில் 20 தொகுதியில் போட்டியிட வேண்டும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி
புதுச்சேரியில் 20 தொகுதியில் போட்டியிட வேண்டும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி
புதுச்சேரியில் 20 தொகுதியில் போட்டியிட வேண்டும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி
புதுச்சேரியில் 20 தொகுதியில் போட்டியிட வேண்டும் இரண்டாம் கட்ட தலைவர்கள் மீண்டும் போர்க்கொடி
ADDED : செப் 19, 2025 03:14 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் 20 தொகுதியில் போட்டியிட வேண்டும் என இரண்டாம் கட்ட காங்., தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
காங்., மாநில தலைவர் வைத்திலிங்கத்தை நேரில் சந்தித்த இரண்டாம் கட்ட தலைவர்கள் மனு அளித்த பின் நிருபர்களிடம் கூறியதாவது:
புதுச்சேரியில் இண்டியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை தாங்க வேண்டும். தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை புதுச்சேரி காங்., அலுவலகத்தில்தான் நடத்த வேண்டும். 20 தொகுதி காங்கிரஸ் கட்சிக்கும் 10 தொகுதி கூட்டணி கட்சிக்கு என்ற உடன்பாடு எட்டப்பட வேண்டும்.
இல்லையென்றால் தனித்தே போட்டியிட வேண்டும். தற்போதுள்ள மாநில காங்., கமிட்டியை கலைத்துவிட்டு, புதிய கமிட்டியை நியமிக்க வேண்டும்.
கட்சித்தலைவர், தொகுதிக்குச் சென்று ஆய்வு செய்து கமிட்டி அமைக்க வேண்டும். புதுச்சேரி நகரப்பகுதியில் முத்தியால்பேட்டை, ராஜ்பவன், உருளையன்பேட்டை, நெல்லித்தோப்பு தொகுதிகளை கேட்டுப் பெற வேண்டும்.
புதுச்சேரி தேர்தலில் ராகுல் தனி கவனம் செலுத்தி வேட்பாளர்களை தேர்வு செய்ய வேண்டும். தேர்தல் கமிட்டிகளில் மாநில, மாவட்ட நிர்வாகிகளை சேர்க்க வேண்டும். என்.ஆர்.காங்., - பா.ஜ., ஆட்சியை அகற்ற கிராமங்களில் பாதயாத்திரை நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து நிறைவேற்ற வேண்டும் என மனு கொடுத்துள்ளோ ம் என தெரிவித்தனர்.
பொதுச்செயலாளர்கள் மணவாளன், சிவ சண்முகம், ரஹ்மான் வேல்முருகன், ஓ.பி.சி., தலைவர் கண்ணன், செயலாளர்கள் சரவணன், தங்கமணி, ரமேஷ், பி.எம்.சரவணன், செல்வம், துரை, செல்வநாதன் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர்.