/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் கல்லுாரியில் பி.டெக்., மாணவர்களுக்கு முதலாமாண்டு துவக்க விழா மணக்குள விநாயகர் கல்லுாரியில் பி.டெக்., மாணவர்களுக்கு முதலாமாண்டு துவக்க விழா
மணக்குள விநாயகர் கல்லுாரியில் பி.டெக்., மாணவர்களுக்கு முதலாமாண்டு துவக்க விழா
மணக்குள விநாயகர் கல்லுாரியில் பி.டெக்., மாணவர்களுக்கு முதலாமாண்டு துவக்க விழா
மணக்குள விநாயகர் கல்லுாரியில் பி.டெக்., மாணவர்களுக்கு முதலாமாண்டு துவக்க விழா
ADDED : செப் 19, 2025 03:14 AM

புதுச்சேரி: மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் 26ம் ஆண்டு,பி.டெக்., மாணவர்களுக்கான முதலாமாண்டு துவக்க விழா நடந்தது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். கல்லுாரி இயக்குநர் வெங்கடாஜலபதி வரவேற்றார். செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், இணைச் செயலாளர் வேலாயுதம், தக் ஷ சீலா பல்கலைகழக இணைவேந்தர் நிலா பிரியதர்ஷனி முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினர்கள் டி.சி.எஸ். நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பு துறையின் விநியோக தலைவர் நடராஜன் சுவாமிநாதன், டி.சி.எஸ். நிறுவனத்தின் அகாடமிக் அலையன்சஸ் குழும மனிதவள மண்டல தலைவர் ரவிக்குமார் மூர்த்தி சிறப்புரையாற்றினர்.மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரி முதல்வர் மலர்க்கண் நோக்கவுரையாற்றினார்.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளைத் தலைவர் தனசேகரன் பேசுகையில், 'மாணவர்கள் கல்வி திட்டத்தினை தவறாமல் கடைபிடித்து அவர்களாகவே ஒரு செயல் திட்டத்தை உருவாக்க வேண்டும். கல்லுாரியில் நடக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை தேசிய மற்றும் பன்னாட்டு அளவில் வெளிபடுத்த வேண்டும்' என்றார்.
நிகழ்ச்சியில், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர்,ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் டீன் வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்னர்.கல்லுாரி தேர்வு கட்டுபாட்டாளர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.