/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க புதுச்சேரி வீரர்கள் ஆந்திரா பயணம்தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க புதுச்சேரி வீரர்கள் ஆந்திரா பயணம்
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க புதுச்சேரி வீரர்கள் ஆந்திரா பயணம்
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க புதுச்சேரி வீரர்கள் ஆந்திரா பயணம்
தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க புதுச்சேரி வீரர்கள் ஆந்திரா பயணம்
ADDED : ஜன 08, 2024 04:47 AM

புதுச்சேரி; புதுச்சேரி டென்னிக்காய்ட் வீரர்கள், 47 வது தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க ஆந்திரா புறப்பட்டு சென்றனர்.
அகில இந்திய டென்னிக்காய்ட் பெடரேஷன், ஆந்திர மாநில டென்னிக்காய்ட் சங்கம் சார்பில், 47வது தேசிய சீனியர் டென்னிக்காய்ட் சாம்பியன்ஷிப் போட்டி, நாளை (9ம் தேதி) முதல் 13ம் தேதி வரை ஆந்திர மாநிலம் பாலாசாவில் நடக்கிறது.இப்போட்டியில், புதுச்சேரி மாநிலம் சார்பாக கோவிந்தராஜன், தமிழ்வேந்தன், பிரேம்குமார், கார்த்திக்ராஜா, ரியாஸ்சுதீன், மனோஜ்குமார் அடங்கிய ஆண்கள் அணியும், கமலி, முத்துஅழகி, சோபியா, சுவேதா, ஜனனி, சுனிதா ஆகியோர் அடங்கிய மகளிர் அணியும் கலந்து கொள்கின்றன.
இவர்களுடன் பயிற்சியாளர்கள் கரிகாலன், பிரகாஷ், மேலாளர்கள் தினேஷ்குமார், செல்வக்குமார், அணி ஒருங்கிணைப்பாளர் ஷாம் ரோசாரியோ ஆகியோர் நேற்று ஆந்திரா புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக, ஆந்திரா புறப்பட்ட வீரர்களை புதுச்சேரி கபடி சங்கத்தின் தலைவர் விஜயராணி ஜெயராமன், புதுச்சேரி மாநில அமெச்சூர் டென்னிக்காய்ட் சங்க தலைவர் ராமு ஆகியோர் வாழ்த்தி, வழியனுப்பி வைத்தனர்.