/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி பரிசளிப்பு புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் முதலிடம்'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி பரிசளிப்பு புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் முதலிடம்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி பரிசளிப்பு புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் முதலிடம்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி பரிசளிப்பு புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் முதலிடம்
'தினமலர் - பட்டம்' மெகா வினாடி வினா போட்டி பரிசளிப்பு புதுச்சேரி அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் முதலிடம்
அமலோற்பவம் பள்ளி முதலிடம்
கடைசி வரை ஆர்வமும், திரிலும், திருப்பமுமாக நடந்த இறுதிப்போட்டியில் புதுச்சேரி அமலோற்பவம் மேனிலைப்பள்ளி மாணவர்கள் பரத்குமார், புவியரசு அடங்கிய அணி முதலிடத்தை தட்டி சென்றது. அவர்களுக்கு கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.
ஸ்மார்ட் வாட்சுகள்
நான்காம் இடம் பிடித்த புதுச்சேரி ஆச்சாரியா பால சிக் ஷா மந்திர் மாணவர்கள் லக் ஷன், மோனிஷ், ஐந்தாம் இடம் பிடித்த விருத்தாசலம் கே.எஸ்.ஆர் ைஹடெக் பள்ளி மாணவர்கள் நந்தினிஸ்ரீ, பார்கவி, ஆறாம் இடம் பிடித்த புதுச்சேரி பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் காமேஷ், கிேஷார், ஏழாம் இடம் பிடித்த கள்ளக்குறிச்சி ஏ.கே.டி.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சக்திபிரியா, ரூபாஸ்ரீ, எட்டாம் இடம் பிடித்த விருத்தாசலம் ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனவித்யா, யுவராஜ், உள்ளிட்ட 10 பேருக்கும் 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஸ்மார்ட் வாட்ச், கேடயம் பதக்கம், பரிசாக வழங்கப்பட்டது.
பார்வையாளர்களுக்கு பரிசு
இறுதி சுற்றில் பங்கேற்க தவறினாலும், பார்வையாளராக இருந்த மாணவர்கள் மேடையில் இருந்து எட்டு அணிகளும் பதிலளிக்க திணறிய கேள்விகளுக்கு அசத்தலான பதிலளித்து கைத்தட்டலை அள்ளினர். அவர்களுக்கு புளுடூத் நெக்பாண்ட் பரிசாக வழங்கப்பட்டது.
நினைவு பரிசு
வினாடி வினா முதற்கட்ட தேர்வில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பங்கு பெற செய்த புதுச்சேரி பெத்திசெமினார் சி.பி.எஸ்.இ., பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ், விழுப்புரம் சரஸ்வதி குரூப் ஆப் எஜூகேஷன் நிர்வாக இயக்குனர் முத்துசரவணன், விழுப்புரம் ரோட்டரி எஜூகேஷன் டிரஸ்ட் நிர்வாகிகள் சரவணன், அன்பழகன், விழுப்புரம் ஸ்ரீ ஜெயேந்திர வித்யாலயா டைமண்ட் ஜூப்லி பள்ளி செயலாளர் ஜனார்த்தனன், காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக்குலேஷன் நிறுவனர் முத்துகுமரன், தியாகதுருகம் மவுண்ட்பார்க் பள்ளி தாளாளர் மணிமாறன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.