/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சுகாதாரத்துறை பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு சுகாதாரத்துறை பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு
சுகாதாரத்துறை பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு
சுகாதாரத்துறை பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு
சுகாதாரத்துறை பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு
ADDED : செப் 04, 2025 06:56 AM
புதுச்சேரி : சுகாதாரத்துறை காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது.
புதுச்சேரி சுகாதாரத்துறையில் காலியாக உள்ள தியேட்டர் உதவியாளர்-17, ஏ.என்.எம்., அல்லது மகப்பேறு உதவியாளர்-53, சுகாதார உதவியாளர்-24, மருந்தாளுனர்- 43, இ.சி.ஜி., தொழில்நுட்ப வல்லுனர்-7, என, மொத்தம் 144 பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த மாதம் 23ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடந்தது. 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர்.
இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் தியேட்டர் உதவியாளர் பிரிவில் ஜோதிவாசன் 57 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார். ஏ.என்.எம்., அல்லது மகப்பேறு உதவியாளர் பணிக்கு இளவரசி 67.12 மதிப்பெண் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார். மருந்தாளுனர் பணிக்கு தீபன் ராஜ் 45 மதிப்பெண்கள் எடுத்து முதலிடம் பெற்றுள்ளார். சுகாதார உதவியாளர் பணிக்கு செல்வகணேஷ் 68.5 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், இ.சி.ஜி. தொழில்நுட்ப வல்லுனர் பணிக்கு நித்யா 53.43 மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும் பெற்றுள்ளனர். இதே போல் காத்திருப்போர் பட்டியல் விவரமும் சுகாதாரத்துறை இணைய தளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.