/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரயிலில் குட்கா கடத்தல் வடமாநில வாலிபர்கள் கைது ரயிலில் குட்கா கடத்தல் வடமாநில வாலிபர்கள் கைது
ரயிலில் குட்கா கடத்தல் வடமாநில வாலிபர்கள் கைது
ரயிலில் குட்கா கடத்தல் வடமாநில வாலிபர்கள் கைது
ரயிலில் குட்கா கடத்தல் வடமாநில வாலிபர்கள் கைது
ADDED : செப் 04, 2025 06:56 AM
புதுச்சேரி : ரயில் குட்கா பொருட்களை கடத்தி வந்த வடமாநில வாலிபர்கள் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்கு ரயில் மூலம் புகையிலைப் பொருட்கள் கடத்தி வருவதாக போலீசாருக்கு புகார்கள் வந்தது. இதனை தொடர்ந்து ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் நேற்று மதியம் 12:30 மணியளவில் புதுச்சேரி ரயில் நிலையத்தில் புவனேஷ்வரில் இருந்து வந்த ரயில் பயணிகளிடம் சோதனை நடத்தினர்.
அப்போது ரயில் வந்த வாலிபர்கள் 4 பேர் பைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த பாசாகான், 37; சிமாஞ்சல் சேத்தி, 28; சிபாசங்கர் நாயக், 25; நவுகா சிங், 25, ஆகியோர் என, தெரியவந்தது. அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.