/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/பி.எஸ்.என்.எல்., முகாம் நாளை துவக்கம்பி.எஸ்.என்.எல்., முகாம் நாளை துவக்கம்
பி.எஸ்.என்.எல்., முகாம் நாளை துவக்கம்
பி.எஸ்.என்.எல்., முகாம் நாளை துவக்கம்
பி.எஸ்.என்.எல்., முகாம் நாளை துவக்கம்
ADDED : ஜன 07, 2024 05:10 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம் நாளை துவங்குகிறது.
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., அலுவலக செய்திக்குறிப்பு:
புதுச்சேரி பி.எஸ்.என்.எல்., சிறப்பு விற்பனை முகாம் நாளை 8ம் தேதி துவங்கி 11ம் தேதி வரை நான்கு நாட்கள் நடக்கிறது.முகாம் மேட்டுப்பாளையம், வில்லியனுார் கொம்யூன் பஞ்சாயத்து, பாகூர், கோட்டக்குப்பம், திருக்கனுார், நைனார் மண்டபம் டாடாமோட்டார்ஸ், அண்ணாசாலை அபிராமி ரெசிடென்ஸ் கரியமாணிக்கம், ரங்கப்பிள்ளை வீதி பொது தொலைபேசி அலுவலகம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
முகாமில், ரூ.269 மதிப்புள்ள பி.எஸ்.என்.எல்., 4ஜி சிம் ரூ.50க்கு வழங்கப்படுகிறது. புதிய பி.எஸ்.என்.எல்., சிம் கார்டில் முதல் 45 நாட்களுக்கு அனைத்து நெட்வொர்க்களுக்கும் இலவசமாக பேசலாம். தினசரி 2 ஜி.பி., டேட்டா, 100 எஸ்.எம்.எஸ்., இலவசம். இதர நெட்வொர்க்கிலிருந்து எம்.என்.பி., மூலம் பி.எஸ்.என்.எல்., நெட்வொர்க்கிற்கு இலவசமாக மாற்றி கொள்ளலாம்.
பி.எஸ்.என்.எல்., 2 ஜி, 3 ஜி சிம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் மையங்கள் மற்றும் மேளா நடக்கும் இடங்களில் இலவசமாக பி.எஸ்.என்.எல்., 4ஜி சிம்களாக மாற்றி கொள்ளலாம்.
அதிவேக இண்டர்நெட் வழங்கக்கூடிய பாரத் பைபர் நுழைவு பிளான் ரூ.329 முதல் வழங்கப்படுகிறது. முகாமில், புதிய பாரத் பைபர் இணைப்புக்கு நேரடியாக பதிந்து கொள்ளலாம். அல்லது 9486330000 எண்ணிற்கு வாட்ஸ் ஆப் செய்யலாம். பாரத் பைபர் இணைப்பு பழுது நீக்க 18004444 எண்ணில் பதியலாம்.
இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.