ADDED : செப் 27, 2025 02:42 AM

புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டில் எம்.பி.பி.எஸ்.,படிக்க இடம் கிடைத்த மாணவர்களுக்கு இலவச புத்தகம், சீருடை, ஸ்டெதஸ்கோப் மற்றும் மருத்துவ கிட் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் மாணவர்களின் வீட்டிற்கு சென்றே வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, புதுச்சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி தலைமை தாங்கினார். கலெக்டர் குலோத்துங்கன் மாணவர்களின் மருத்துவ 'கிட்'களை வழங்கி, மாணவர்களைவாழ்த்தினார்.
நிகழ்ச்சியில் குளங்கள் காப்போம் குழு கார்த்திகேயன், வேல்முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை புதுச் சேரி சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமிசெய்திருந்தார்.


