ADDED : செப் 27, 2025 02:43 AM

புதுச்சேரி : திலாசுப்பேட்டை அரசு ஆண்கள் நடுநிலைப் பள்ளிக்கு வயலின் இசைக் கருவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். புதுச்சேரி ஸ்ரீஜி மியூசிக்கல்ஸ் உரிமையாளர் ஜிதேந்திரன், பள்ளிக்கு நான்கு வயலின் இசைக் கருவிகளை வழங்கி, இசையின் முக்கியத்துவம் மற்றும் கல்வியின் சிறப்பு குறித்து எடுத்துரைத்தார்.
இசை ஆசிரியர் தணிகாசலம் வரவேற்றார். ஆசிரியர் ஜெயந்தி நன்றி கூறினார். ஆசிரியர் சாந்தி தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் கனகவல்லி, ஜெயப்பிரகாஷ், லட்சுமி, மேரி போர்ஷியா, ஹேமாவதி, கவுசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.


