ADDED : செப் 10, 2025 08:54 AM

புதுச்சேரி; முத்தியால்பேட்டையில் விநாயகர் சதுர்த்தி நடந்த பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசளிப்பு விழா முத்தியால்பேட்டை பகுதியில் நடந்தது.
முத்தியால்பேட்டை ராஜ சந்துரு அறக்கட்டளை மற்றும் அப்பர் சிறு தொழில் சேவை அறக்கட்டளை இணைந்து, 5ம் ஆண்டு குழந்தை விநாயகர் சதுர்த்தி விழாவை யொட்டி, குழந்தைகள், பெண்கள், இளைஞர்களுக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
விழாவில், ராஜ சந்துரு அறக்கட்டளையின் நிறுவனர் ராஜா சந்துரு வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதல் பரிசாக ஓவன், 2ம் பரிசு பிரையர், 3ம் பரிசு டவர் பேன், 4ம் பரிசு மிக்சர் கிரைண்டர், 5ம் பரிசு கெட்டில் மற்றும் ஆறுதல் பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். முத்தியால்பேட்டை சேர்ந்த திரளான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.