/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் நிறுவன ஊழியர் நெஞ்சு வலி ஏற்பட்டு சாவு தனியார் நிறுவன ஊழியர் நெஞ்சு வலி ஏற்பட்டு சாவு
தனியார் நிறுவன ஊழியர் நெஞ்சு வலி ஏற்பட்டு சாவு
தனியார் நிறுவன ஊழியர் நெஞ்சு வலி ஏற்பட்டு சாவு
தனியார் நிறுவன ஊழியர் நெஞ்சு வலி ஏற்பட்டு சாவு
ADDED : ஜூன் 11, 2025 07:48 AM
புதுச்சேரி; சேலம், பொன்னம்மா பேட்டையை சேர்ந்தவர் அர்த்தநாரீஸ்வரர், 42. இவர், புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் உள்ள தனியார் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் தங்கி, அங்கு வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் அவரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
டாக்டர் பரிசோதித்து அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து, அவரது சகோதரி அஸ்வதி கொடுத்து புகாரின் பேரில், உருளையன்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.