ADDED : ஜூன் 11, 2025 07:49 AM
புதுச்சேரி; புதுச்சேரியில் போதையில் ரகளை செய்த 6 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
லாஸ்பேட்டை, போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து சென்றனர். இ.சி.ஆரில் காமராஜர் மணி மண்டபம் அருகில் இருவர் மது போதையில், பொதுமக்களிடம் ரகளை செய்து கொண்டிருந்தனர். இருவரையும் போலீசார் பிடித்து விசாரித்தனர். லாஸ்பேட்டை நித்தியானந்தம், 28, யோகேஸ்வரன், 25, என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
அதே போல, முத்தியால்பேட்டை போலீசார் நேற்று முன்தினம் இரவு, குருசுகுப்பம் கடற்கரை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு போதையில் ரகளை செய்த முத்தியால்பேட்டை அன்புராஜ், 25; ஸ்டீபன்ராஜ், 24; குருசுகுப்பம் ஜான்சன், 26; ஒதியம்பட்டு டேனியல், 23, ஆகிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.