/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கோவில் நில மோசடி வழக்கில் முன்ஜாமின் மனு தள்ளுபடிகோவில் நில மோசடி வழக்கில் முன்ஜாமின் மனு தள்ளுபடி
கோவில் நில மோசடி வழக்கில் முன்ஜாமின் மனு தள்ளுபடி
கோவில் நில மோசடி வழக்கில் முன்ஜாமின் மனு தள்ளுபடி
கோவில் நில மோசடி வழக்கில் முன்ஜாமின் மனு தள்ளுபடி
ADDED : ஜன 06, 2024 06:32 AM
புதுச்சேரி : கோர்காடு பாலசுந்தர விநாயகர் கோவிலுக்கு போலி ஆவணம் மூலம் பட்டா பெற்று மோசடி செய்த வழக்கில் பெண் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
வில்லியனுார் அருகில் உள்ள கோர்காடு பாலசுந்தர விநாயகர் கோவிலுக்கு சொந்தமாக 2 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்திற்கு கடந்த 2008 ம் ஆண்டு பட்டா கோரி சிலர் விண்ணப்பித்தனர்.
அப்போதைய செட்டில்மென்ட் அதிகாரி வேலாயுதம், கோவில் பெயரில் உள்ள நிலத்திற்கு பட்டா வழங்க முடியாது என மறுத்தார். 2011ம் ஆண்டு நில அளவை இயக்குநராக இருந்த கனகராஜிடம் முறையிடப்பட்டது. அப்போதும் பட்டா வழங்க மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு பட்டா வழங்க மீண்டும் முயற்சித்தனர். அப்போது, செட்டில்மெண்ட் முதல் பிரிவு அதிகாரியாக இருந்த பாலாஜி, செட்டில்மெண்ட் 2 கீழ் உள்ள கோர்காடு பகுதிக்கு, பட்டா வழங்க உத்தரவிட்டார். அதன்பின் அவர் பதவி உயர்வு பெற்று சென்றுவிட்டார்.
பட்டா வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. இந்நிலையில், லாஸ்பேட்டை கிருஷ்ணமூர்த்தி மனைவி லதா, சென்னை ஐகோர்ட்டில் பட்டா வழங்கல் உத்தரவை அமல்படுத்தி, தேசிய நெடுஞ்சாலைக்கு எடுக்கப்பட்ட இடத்திற்கு இழப்பீடாக ரூ. 70 லட்சம் வழங்க வேண்டும், மீதமுள்ள 2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா வழங்க கோரினர்.
காமாட்சியம்மன் கோவில் நில மோசடி வழக்கு துவங்கியதால், லதா தான் தாக்கல் செய்த ரிட் மனுவை வாபஸ் பெற்றார். இந்நிலையில், கோவில் நிர்வாகிகள் போலி ஆவணம் மூலம் பட்டா பெற முயற்சிப்பதாக புகார் அளித்தனர்.
அதன்பேரில், லஞ்ச ஒழிப்பு போலீசார் பட்டா வழங்க உத்தரவிட்ட செட்டில்மெண்ட் அதிகாரி பாலாஜி, லாஸ்பேட்டை கிருஷ்ணமூர்த்தி மனைவி லதா, தட்சிணாமூர்த்தி மனைவி ஹேமலதா (எ) நந்தினி, ராமமூர்த்தி, சுந்தராம்பாள் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் லதா புதுச்சேரி மாவட்ட தலைமை நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார்.
மனுவை தலைமை நீதிபதி சந்திரசேகரன் விசாரித்தார். அப்போது, கோவில் நிர்வாகம் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, லதாவின் முன்ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.