ADDED : ஜன 10, 2024 10:57 PM

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது.
பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவிலில், நேற்று முன்தினம் பிரதோஷ வழிபாடு நடந்தது. இதனையொட்டி, அன்று காலை வேதாம்பிகையம்மன், மூலநாதர், பால விநாயகர், முருகர், சண்டிகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை பிரதோஷ வழிபாடு நடந்தது.
கோவில் கொடிமரம் எதிரே, வடக்கு திசை நோக்கி செவி சாய்த்து அருள் பாலிக்கும் செல்வநந்தி பெருமானுக்கு பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிஷேகம், மாலை மகா தீபாராதனை நடந்தது.
திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.