/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கவர்னர் மாளிகையில் பொங்கல் கோலாகலம்: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்புகவர்னர் மாளிகையில் பொங்கல் கோலாகலம்: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
கவர்னர் மாளிகையில் பொங்கல் கோலாகலம்: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
கவர்னர் மாளிகையில் பொங்கல் கோலாகலம்: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
கவர்னர் மாளிகையில் பொங்கல் கோலாகலம்: முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு
ADDED : ஜன 13, 2024 07:04 AM

புதுச்சேரி : கவர்னர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில், கவர்னர் தமிழிசை பொங்கல் வைத்து கொண்டாடினார்.
புதுச்சேரி கவர்னர் மாளிகையில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கவர்னர் தமிழிசை புது பானையில் பால் மற்றும் அரிசி இட்டு பொங்கல் நிகழ்ச்சியை துவக்கிவைத்தார். தொடர்ந்து பெண்கள் புது பானையில் பொங்கல் வைத்தனர்.
பொங்கல் விழாவையொட்டி, கவர்னர் மாளிகை வளாகம் முழுதும் தோரணங்கள், கரும்புகள் கட்டி அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. கிராமிய கலைஞர்களின் கலை நிகழ்ச்சியை, கவர்னர் தமிழிசை உறியடித்து துவக்கி வைத்தார்.
மயிலாட்டம்,தப்பாட்டம், கரகாட்டம், பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
மாட்டு வண்டி ஊர்வலமும் நடந்தது. இவற்றை கவர்னர் மற்றும் விருந்தினர்கள் கண்டுரசித்தனர்.
முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், வேளாண் துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார், துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் ஆறுமுகம், பாஸ்கர், வெங்கடேசன், ராமலிங்கம், சிவசங்கரன், ஜான்குமார், தலைமை செயலர் ராஜிவ் வர்மா, டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ், அரசு செயலர் மணிகண்டன், சீனியர் எஸ்.பி. நாரா சைதன்யா உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பங்கேற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகள் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி சட்டை அணிந்து கொண்டு கலந்து கொண்டனர்.
எதிர்கட்சி புறக்கணிப்பு
கவர்னர் மாளிகையில் நடக்கும் பொங்கல் விழாவில் பங்கேற்ற அனைத்து அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், ஆளும் கட்சி யான என்.ஆர்.காங்., பா.ஜ.,வினர் மட்டுமே விழாவில் பங்கேற்றனர். காங்., தி.மு.க., எம்.எல். ஏ.,க்கள் விழாவை புறக்கணித்தனர்.