/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு
பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு
பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு
பேனர் வைத்தவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு
ADDED : ஜூன் 14, 2025 02:18 AM
அரியாங்குப்பம் : அபிேஷகப்பாக்கம் சாலையில் பேனர் வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் போலீசில் புகார் அளித்தார்.
தவளக்குப்பத்தில் இருந்து அபிேஷகப்பாக்கம் வரை சாலையில் இரு புறங்களில் அரசியல் பிரமுகர்களின் மெகா சைஸ் பேனர்கள் 50க்கும் மேற்பட்டவை வைக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒரு வாரமாக சாலையில் இருக்கும் பேனர்களால், வாகனத்தில் செல்பவர்களின் கவன சிதறல்கள் ஏற்பட்டு விபத்துக்கள் நடக்கும் நிலை உள்ளது. மேலும், பேனர்களால், சாலை செல்லும் வாகனங்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருகிறது.
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகம் மற்றும் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் அனுமதி வாங்காமல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
பேனர் வைத்தவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுப்பணித்துறை கட்டடம் மற்றும் சாலை தெற்கு பிரிவு உதவிப் பொறியாளர் தவளக்குப்பம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.