ADDED : மார் 24, 2025 04:10 AM

புதுச்சேரி: அரியாங்குப்பம் பகுதியில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர்.
புதுச்சேரி டி.ஜி.பி., ஷாலினி சிங் போலீசார் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ரோந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி புதுச்சேரியில் எஸ்.பி., தலைமையில் போலீசார் தினமும் இரவு ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று எஸ்.பி., ஜிந்தா கோதண்டராமன் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் ஜெயசங்கர், தியாகராஜன் மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு அரியாங்குப்பம் நான்கு முனை சந்திப்பில் ரோந்து பணியில் ஈடுப்பட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த சந்தேகத்திற்கு இடமான கார்கள், இருசக்கர வாகனங்களை ஆய்வு செய்தனர்.