/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கட்டண பாக்கி: மின் இணைப்பு துண்டிப்புகட்டண பாக்கி: மின் இணைப்பு துண்டிப்பு
கட்டண பாக்கி: மின் இணைப்பு துண்டிப்பு
கட்டண பாக்கி: மின் இணைப்பு துண்டிப்பு
கட்டண பாக்கி: மின் இணைப்பு துண்டிப்பு
ADDED : ஜன 05, 2024 06:39 AM

பாகூர் : காட்டுக்குப்பம் பகுதிகளில், மின் கட்டணம் பாக்கி வைத்துள்ளவர்களின், மின் இணைப்புகளை துண்டிக்கும் பணியில், மின் துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் மின்சார கட்டணம் பாக்கியை வசூல் செய்யும் வகையில் மின் துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.
மின் கட்டணம் பாக்கி வைத்துள்ள நுகர்வோரின் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக காட்டுக்குப்பம் இளநிலை மின் பொறியாளர் அலுவலக எல்லைக்குட்பட்ட பகுதியில் 10 ஆயிரம் ரூபாய்க்கும் அதிகமாக கட்டண பாக்கி வைத்துள்ள மின் நுகர்வோர் குறித்த பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களது மின் இணைப்புகள் துண்டிக்கும் பணி நேற்று முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இளநிலை பொறியாளர் ஸ்டாலின் தலைமையில், நான்கு குழுக்களாக மின் துறை ஊழியர்கள் பிரிந்து கட்டண பாக்கி வைத்துள்ளவர்களின் மின் இணைப்புகள் துண்டிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காட்டுக்குப்பம் பகுதியில் நேற்று வீடுகள், கடை, வணிக நிறுவனங்கள் என 90 இணைப்புகள் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து, 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மின் கட்டண பாக்கி வசூலானது. பின், 27 மின் இணைப்புகள் மீண்டும் வழங்கப்பட்டது.