/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சர்வதேச கால்பந்து போட்டி நடுவர் தேர்வு புதுச்சேரி மின்துறை ஊழியர் பங்கேற்புசர்வதேச கால்பந்து போட்டி நடுவர் தேர்வு புதுச்சேரி மின்துறை ஊழியர் பங்கேற்பு
சர்வதேச கால்பந்து போட்டி நடுவர் தேர்வு புதுச்சேரி மின்துறை ஊழியர் பங்கேற்பு
சர்வதேச கால்பந்து போட்டி நடுவர் தேர்வு புதுச்சேரி மின்துறை ஊழியர் பங்கேற்பு
சர்வதேச கால்பந்து போட்டி நடுவர் தேர்வு புதுச்சேரி மின்துறை ஊழியர் பங்கேற்பு
ADDED : ஜன 06, 2024 05:37 AM

புதுச்சேரி, ;மலேசியாவில் நடக்கும் சர்வதேச கால்பந்தாட்ட நடுவர்களுக்கான போட்டியில் பங்கேற்கும் புதுச்சேரி மின்துறை ஊழியர், உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் வாழ்த்து பெற்றார்.
ஆசிய கால்பந்தாட்ட நடுவர் கூட்டமைப்பு சார்பில் வரும் பிப்., மாதம் மலேசியாவில் சர்வதேச நடுவர்களுக்கான இறுதிகட்ட போட்டி நடக்கிறது. இப்போட்டியில், இந்தியா சார்பில் புதுச்சேரியைச் சேர்ந்த அஷ்வின்குமார் பங்கேற்கிறார்.
புதுச்சேரி மின்துறையில் கடந்த 2 ஆண்டுகளாக பணிபுரியும் அஷ்வின்குமார், அகில இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்பின் உயர்மட்ட நடுவர் அமைப்பில் புதுச்சேரியில் இருந்து பங்கேற்கும் ஒரே நபர். இவர், இந்தியன் சூப்பர் லீக் 2023 மற்றும் டுயரண்ட் கோப்பை அரையிறுதி போட்டி உட்பட கடந்த 4 ஆண்டுகளாக உயர்மட்ட போட்டிகளில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
சர்வதேச நடுவர்களுக்கான இறுதி போட்டியில் பங்கேற்க செல்லும் அஷ்வின்குமார், உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றார்.