/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம் எதிர்க்கட்சி தலைவர் சிவா அழைப்புசமத்துவப் பொங்கல் கொண்டாட்டம் எதிர்க்கட்சி தலைவர் சிவா அழைப்பு
சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம் எதிர்க்கட்சி தலைவர் சிவா அழைப்பு
சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம் எதிர்க்கட்சி தலைவர் சிவா அழைப்பு
சமத்துவப் பொங்கல் கொண்டாட்டம் எதிர்க்கட்சி தலைவர் சிவா அழைப்பு
ADDED : ஜன 10, 2024 11:00 PM

புதுச்சேரி: புதுச்சேரி மாநில தி.மு.க., சார்பில் ஊசுடு தொகுதியில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட,பொது மக்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சிவா அழைப்பு விடுத்துள்ளார்.
பதுச்சேரி மாநில தி.மு.க., சார்பில், சமத்துவப் பொங்கல் விழா கொண்டாடுவது குறித்த கலந்தாய்வுக் கூட்டம், வில்லியனுாரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்தது.
ஊசுடு தொகுதி செயலாளர் இளஞ்செழியப்பாண்டியன் தலைமை தாங்கினார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் லோகையன் முன்னிலை வகித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் சிவா ஆலோசனை வழங்கி பேசுகையில், 'வரும், 14ம் தேதி காலை 7:30 மணிக்கு, ஊசுடு தொகுதி பிள்ளையார்குப்பம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்கும் சமத்துவப் பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடுவது.
புதுச்சேரி மண்ணின் இயல், இசை, நாடகக் கலைஞர்களை ஒன்றிணைத்து, கிராமிய இசை, கரகாட்டம், பறையாட்டம், தப்பாட்டம், குயிலாட்டம், சிலம்பாட்டம், உடுக்கை, பம்பை இசை உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்' என, தெரிவித்தார்.
கூட்டத்தில், தொகுதி துணைச் செயலாளர் இரிசன், கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை அமைப்பாளர் உத்திராபதி, ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் கலியமூர்த்தி, விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் வெங்கடேசன், விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர்கள் தேவநாதன், மதிவாணன், தொகுதி பொருளாளர் அருள், சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் அரிதாஸ், கிளைச் செயலாளர்கள் சிலம்புராஜன், நாகமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.