ADDED : மே 12, 2025 02:12 AM

புதுச்சேரி: லாஸ்பேட்டை தொகுதியில் பொது மக்களுக்கு தர்பூசணி வழங்கல் மற்றும் நீர் மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
கோடை காலங்களில் தர்பூசணி வியாபாரம் அமோகமாக நடைபெறும். புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இந்தாண்டு பல ஆயிரம் ஏக்கரில் தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விளைந்த தர்பூசணிகள் சந்தையில் விற்பனைக்கு வந்த நிலையில் ரசாயன ஊசி பழங்களில் செலுத்தப்படுவதாக வதந்தி பரவியது. இதனால் மக்கள் மத்தியில் அச்சம் எழுந்தது.
தர்பூசணி வியாபரிகள் பாதிக்கப்பட்டனர். தமிழகம் மற்றும் புதுச்சேரி முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படவில்லை என்பது தெரிய வந்தது. விவசாயிகளுக்கு வருவாய் ஈட்டி தரும் வகையில், சப்தகிரி அறக்கட்டளையின் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக தர்பூசணி கொள்முதல் செய்து லாஸ்பேட்டை தொகுதி மக்களுக்கு தர்பூசணி பழம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி, நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் சபாநாயகரும், சப்தகிரி அறக்கட்டளையின் நிறுவனர் சிவக்கொழுந்து, சப்தகிரி அறக்கட்டளையின் பொறுப்பாளர் ரமேஷ்குமார் ஆகியோர் நீர்மோர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு தர்பூசணி வழங்கினர்.