ADDED : மே 12, 2025 02:13 AM
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் ராமலிங்கேஸ்வரர் கோவிலில் குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.
குருபகவான் நேற்று ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார். இதனை முன்னிட்டு, ராமலிங்கேஸ்வரர் கோவிலில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதியில்குரு பெயர்ச்சி விழா நடந்தது.
காலை 11:00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரஹ ேஹாமம், 11:30 மணிக்கு பக்தர்கள் பரிகார சங்கல்பம்,12:00 மணிக்கு நவகிரக சிறப்பு அபிேஷகம், 12:10 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடந்தது. மதியம் 1:00 மணிக்கு கலசாபிேஷகம், 1:19 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.