Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/விவசாயிகளுக்கு நிவாரணம் ஓம்சக்தி சேகர் கோரிக்கை

விவசாயிகளுக்கு நிவாரணம் ஓம்சக்தி சேகர் கோரிக்கை

விவசாயிகளுக்கு நிவாரணம் ஓம்சக்தி சேகர் கோரிக்கை

விவசாயிகளுக்கு நிவாரணம் ஓம்சக்தி சேகர் கோரிக்கை

ADDED : ஜன 10, 2024 11:04 PM


Google News
புதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என ஓ.பி.எஸ் அணி மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

கடந்த சில தினங்களாக, பெய்த மழையால் புதுச்சேரி மாநிலத்தில் அறுவடைக்காக காத்திருந்த நெல், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்தன. புதுச்சேரியின் நெற்களஞ்சியமாக திகழும் பாகூர் பகுதியில், 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.

வில்லியனுார், நெட்டப்பாக்கம், கரிக்கலாம்பாக்கம், ஏம்பலம், கோர்க்காடு பகுதியிலும், 500 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளன.காரைக்கால் மாவட்டத்தில் திருநள்ளாறு, கோட்டுச்சேரி, அம்பகரத்துார், நெடுங்காடு உட்பட பல பகுதிகளில், 4,500 ஹெக்டரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்தது. தொடர் மழையால் சம்பா பயிர்களில், 1,000 ஹெக்டேர் அளவிற்கு மேல் நீரில் மூழ்கியுள்ளது என, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

விவசாயமும் விவசாயிகளும் செழிப்போடு இருந்தால் தான்,நாடும் மாநிலமும் சிறப்பாக இருக்கும்.சில தினங்களில் உழவர் திருநாள் கொண்டாட உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணத்தை அரசு உடனடியாக கணக்கீடு செய்து வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us