Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/மாநிலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை... 10.20 லட்சம்; ஆண்களை விட 62,108 பெண்கள் கூடுதல்

மாநிலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை... 10.20 லட்சம்; ஆண்களை விட 62,108 பெண்கள் கூடுதல்

மாநிலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை... 10.20 லட்சம்; ஆண்களை விட 62,108 பெண்கள் கூடுதல்

மாநிலத்தில் வாக்காளர்களின் எண்ணிக்கை... 10.20 லட்சம்; ஆண்களை விட 62,108 பெண்கள் கூடுதல்

ADDED : ஜன 06, 2024 04:59 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் சுருக்குமுறை திருத்தபணி முடிந்து இறுதி வாக்காளர் பட்டியில் நேற்று வெளியிடப்பட்டது. மாநிலத்தில் உள்ள வாக்காளர்கள்மொத்த எண்ணிக்கை 10.20 லட்சத்தினை தாண்டியுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1.1.2024 ஐ தகுதி நாளாக கொண்டு, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 30 தொகுதிகளின் புகைப்பட வாக்காளர் பட்டியலில் சுருக்குமுறை திருத்தப்பணி கடந்த அக்.9ம் தேதி முதல் டிசம்பர் 9ம் தேதி வரை நடைபெற்றது.

இதில் புதிய வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. நேற்று அனைத்து பணிகளும் நிறைவடைந்து 2024ம் ஆண்டிற்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

மாநில தேர்தல் தலைமை அதிகாரி ஜவகர் நேற்று வெளியிட்டார்.

கடந்தாண்டு அக்டோ பர் மாதம் 27ம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 10,07,179 மொத்த வாக்காளர்கள் இருந்தனர். புதிதாக 36,044 வாக்காளர்கள் (3.48 சதவீதம்) சேர்க்கப்பட்டனர். இறப்பு உள்பட பல்வேறு காரணங்களால் 22,309 பேர்(2.21 சதவீதம்) நீக்கப்பட்டனர்.இதன் மூலம் வாக்காளர் இறுதி பட்டியலில் 1.36 சதவீதம் பேர் அதாவது 13,735 நிகர வாக்காளர்கள் இடம் பிடித்துள்ளனர்.

இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வாக் காளர்கள் மொத்த எண்ணிக்கை 10 லட்சத்து 20 ஆயிரத்து 914 ஆக உயர்ந்துள்ளது. இதில் ஆண்கள் - 4,79,329; பெண்கள் - 5, 41,437, மூன்றாம் பாலித்தனர் - 148.

இறுதி வாக்காளர் பட்டி யலில் ஆண்களை விட 62,108 பெண்கள் கூடுதல். அதிகபட்சமாக வில்லியனுார் தொகுதியில் 55,753 வாக்காளர்களும், குறைந்தபட்சம் உருளையன்பேட்டை தொகுதியில் 25,019 வாக்காளர்கள் உள்ளனர். 18 வயது முதல் 19 வயது வரையுள்ள புதிய வாக்காளர்களின் எண்ணிக்கை 26,959 ஆகும்.

பிராந்திய ரீதியாக பார்க் கும்போது புதுச்சேரி 7,84,335, காரைக்கால் 1,66,214, மாகி 31,010, ஏனாம் 39,355 பேர் வாக்காளர்களாக உள்ளனர்.

ஏனாம், மாகி உள்ளடங்கிய 25 சட்டசபை தொகுதி கள் அடங்கிய புதுச்சேரி மாவட்டத்திற்கான வாக்காளர் இறுதி பட்டியலை கலெக்டர் வல்லவன் வெளியிட, அரசியல் கட்சி பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர்.

இதில் ஆண் வாக்காளர்கள் 4,52,179, பெண் வாக்காளர்கள் 4,02,397, மூன்றாம் பாலினத்தவர் 124 என 8,54,700 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இது குறித்து கலெக்டர் வல்லவன் கூறியதாவது:

இறுதி வாக்காளர் பட்டி யல் வெளியிடப்பட்ட 5ம் தேதி முதல் ஏழு நாட்களுக்குள் பொதுவிடுமுறை தவிர்த்து அனைத்து ஓட்டுச்சாவடிகளிலும் மற்றும் வாக்காளர் பதிவு அதிகாரி, உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளின் அலுவலகங்களிலும் பொது மக்களின் பார்வைக்காக வைக்கப்படுகிறது.

18-19 வயது நிரம்பிய புதிய வாக்காளர்கள், திருத்தம் செய்ய விண்ணப்பித்தவர்களுக்கும் அஞ்சல் துறையின் விரைவு தபால் மூலம் அவரவர் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

01.04.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தும் விண்ணப்பிக்க தவறிய வர்களும், 01.04.2024, 01.07.2024 மற்றும் 01.10.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர் கள், https://voters.eci.gov.in மற்றும் voterhelpline app, ஓட்டுச்சாவடி நிலைய அதி காரிகள் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

அத்துடன் பொதுமக்களின் தேர்தல் தொடர்பான விபரங்களை அறிந்து கொள்ள 1950 என்ற இலவச எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us