/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி பூஜை துவக்கம் சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி பூஜை துவக்கம்
சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி பூஜை துவக்கம்
சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி பூஜை துவக்கம்
சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரி பூஜை துவக்கம்
ADDED : செப் 23, 2025 08:11 AM

புதுச்சேரி : சாரதாம்பாள் கோவிலில், 51ம் ஆண்டு சாரதா நவராத்திரி சிறப்பு ஹோமங்கள், மகாசண்டி ஹோமம் சிறப்பு பூஜைகள் நேற்று துவங்கியது.
புதுச்சேரி எல்லப்பிள்ளைச்சாவடி, 100 அடி சாலையில் சிருங்கேரி சிவகங்கா மடம், சாரதாம்பாள் கோவிலில் 51ம் ஆண்டு சாரதா நவராத்திரி சிறப்பு ஹோமங்கள் நேற்று 22ம் தேதி துவங்கி வரும் 2ம் தேதி ஊஞ்சல் உற்சவத்துடன் நிறைவு பெறுகிறது.
அதையொட்டி, நேற்று காலை யாகசாலை பிரவேசம், விக்னேஸ்வர பூஜை, ரக்ஷாபந்தனம், கலசஸ்தாபனம், வாஸ்து சாந்தி, மாத்ருகா பூஜை, ஆவஹந்தி ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், மகா கணபதி ஹோமம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இரண்டாம் நாளான இன்று 23ம் தேதி காலை 8:00 மணிக்கு சுப்ரமண்ய ஷடாக்ஷரி ஹோமம், 10:30 மணிக்கு நவக்கிரஹ மிருத்யுஞ்ஜய ஹோமம் நடக்கிறது. தினசரி காலை சிறப்பு ேஹாமங்கள் நடக்கிறது.
முக்கிய நிகழ்வாக வரும் 1ம் தேதி காலை 7:30 மணிக்கு மகாசண்டி ஹோமம், 2ம் தேதி சாரதாம்பாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.