ADDED : செப் 23, 2025 08:11 AM
புதுச்சேரி : புதுச்சேரி சண்முகாபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் 33, கார் டிரைவர். திருமணமாகதவர். இவர் கடந்த 20ம் தேதி கோயபுத்துாருக்கு சவாரி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். இதற்கிடையில் மணிகண்டனின் தங்கை மஞ்சு அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது அழைப்பை ஏற்கவில்லை.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மஞ்சுவிற்கு திரும்ப போன் செய்த மணிகண்டன் அம்மாவை பார்த்துக்கொள் என கூறிவிட்டு போனை துண்டித்துள்ளார். இதையடுத்து மஞ்சு அவரது செல்போன் எண்ணுக்கு அழைத்தும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த மஞ்சு மேட்டுப்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில் சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் மணிகண்டனின் செல்போன் எண் டவர் லொகேஷனை சோதனை செய்தபோது, அவர் சாரம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் இருப்பதாக காட்டியது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது மணிகண்டன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
புகாரின் பேரில் உருளை யன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.