/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தேசிய கருத்தரங்கம்காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தேசிய கருத்தரங்கம்
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தேசிய கருத்தரங்கம்
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தேசிய கருத்தரங்கம்
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத்தில் தேசிய கருத்தரங்கம்
ADDED : பிப் 24, 2024 06:39 AM

புதுச்சேரி : லாஸ்பேட்டை காஞ்சி மாமுனிவர் அரசினர் பட்ட மேற்படிப்பு ஆராய்ச்சி நிறுவனம், விருதுநகர் கல்லுாரி சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கம் நடந்தது.
காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தில் 'ஆங்கில மொழிக்கல்வி வளர்ச்சியில் தொழில் நுட்பத்தின் பங்கு' என்ற தலைப்பில் நடந்த கருத்தரங்கு துவக்க விழாவில் ஆங்கிலத் துறைத் தலைவர் ராஐவேலு வரவேற்றார். பட்ட மேற்படிப்பு மைய இயக்குநர் செல்வராஜ் தலைமை தாங்கினார். விருதுநகர் கல்லுாரியின் ஆங்கில துறை தலைவர் கபிலர் வாழ்த்தி பேசினார்.
அண்ணா பல்கலைக் கழக ஆங்கிலத்துறை தலைவர் லட்சுமி 'இன்றைய தலைமுறையின் ஆங்கில வகுப்பறை' என்ற தலைப்பிலும், பேராசிரியர் ராஐவேலு 'தகவல் தொடர்பு திறன்களை மேம்படுத்துவதற்கான உத்திகள்' தலைப்பிலும் பேசினர்.
பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லுாரி முன்னாள் ஆங்கிலத்துறைத் தலைவர் ரவி, விருதுநகர் கல்லுாரி பேராசிரியர் ஆனந்தம் நன்றி கூறினர்.
இதில், 75 விருதுநகர் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். கருத்தரங்கில் பேசிய மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.