/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேசிய ஊட்டச்சத்து மாத விழா துவக்கம் தேசிய ஊட்டச்சத்து மாத விழா துவக்கம்
தேசிய ஊட்டச்சத்து மாத விழா துவக்கம்
தேசிய ஊட்டச்சத்து மாத விழா துவக்கம்
தேசிய ஊட்டச்சத்து மாத விழா துவக்கம்
ADDED : செப் 13, 2025 07:25 AM

புதுச்சேரி : புதுச்சேரி மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை சார்பில், 8வது தேசிய ஊட்டச்சத்து மாத துவக்க விழா கம்பன் கலை அரங்கத்தில் நேற்று நடந்தது.
துறை இயக்குநர் முத்துமீனா வரவேற்றார். விழாவை கவர்னர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார். முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, கர்ப்பிணி பெண்கள் மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், அங்கன்வாடியில் முன்பருவ கல்வியை முடித்த குழந்தைகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினார்.
அமைச்சர் தேனீ ஜெயக்குமார் நோக்கவுரை ஆற்றினார். அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., தலைமை செயலர் சரத் சவுக்கான், அரசு செயலர் ஜெயந்த குமார் ரே உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.