/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ராணுவ வீரர்களை பாராட்டி தேசிய கொடி ஊர்வலம் ராணுவ வீரர்களை பாராட்டி தேசிய கொடி ஊர்வலம்
ராணுவ வீரர்களை பாராட்டி தேசிய கொடி ஊர்வலம்
ராணுவ வீரர்களை பாராட்டி தேசிய கொடி ஊர்வலம்
ராணுவ வீரர்களை பாராட்டி தேசிய கொடி ஊர்வலம்
ADDED : ஜூன் 02, 2025 01:11 AM

புதுச்சேரி: ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தலைமையில், தேசிய கொடி ஏந்தி திரளானோர் ஊர்வலம் சென்றனர்.
ஆப்பரேஷன் சிந்துாரில் ஈடுபட்ட முப்படைவீரர்களைபாராட்டி, நன்றி தெரிவிக்கும் வகையில் அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் ஊர்வலம் நடத்தி கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில், மார்டின் குழும நிர்வாக இயக்குனர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தலைமையில் புதுச்சேரியில் ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தில், ஜோஸ் சார்லஸ் மார்டின் தாய் லீமா ரோஸ், எம்.எல்.ஏ.,க்கள் ஜான்குமார், கல்யாணசுந்தரம், சிவசங்கரன், அங்காளன், ரிச்சர்டு பா.ஜ., நிர்வாகிகள், இளைஞர்கள், பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தில், நாட்டுப்பற்றை உணர்த்தும் வகையில் கோஷங்கள் எழுப்பி சென்றனர்.நாட்டுப்புற கலைகளான தப்பாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தற்காப்பு கலைகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
ஊர்வலம் நெல்லித்தோப்பு பகுதியில் இருந்து புறப்பட்டு, லெனின் வீதி, காமராஜர் சாலை, 45வது சாலை வழியாக காமராஜர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகம் அருகில் நிறைவுபெற்றது.தொடர்ந்து, காமராஜர் தொகுதி எம்.எல்.ஏ., அலுவலகத்தில், பொதுமக்களுக்கு அன்னாதானம் வழங்கப்பட்டது.