ADDED : ஜூன் 02, 2025 01:11 AM

புதுச்சேரி: புதுச்சேரி நலப்பணிச் சங்கம் சார்பில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு விழா நடந்தது.
மேட்டுப்பாளையம் அரசுக் கொறடா அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், துணைத் தலைவர் ரமேஷ் வரவேற்றார்.
சங்க தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கி, சுற்றுச்சூழல் சீர்கேடுகளும் அதனைத் தடுக்கும் வழிகளும் குறித்து பேசினார்.
ஓய்வுபெற்ற தாசில்தார் அய்யனார் முன்னிலை வகித்தார். மகளிர் பொறுப்பாளர் விஜயலட்சுமி நோக்கவுரையாற்றினார். துணைத் தலைவர் பரிதா, துணைச் செயலாளர் மகேந்திரவேலன், சுரங்கத்துறை பொறியாளர் செல்வராஜ் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
வாசுகி மாதர் சங்கத்தின் பொறுப்பாளர்கள் பச்சையம்மாள், மேரி, செல்வி, பாக்கியலட்சுமி, புஷ்பா, ஜெயந்தி வாழ்த்தி பேசினர்.விழாவில் சேலைகள், மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை, ஊர் முக்கியஸ்தர்கள், புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் கணபதி, சந்துரு, ரவி ஆகியோர் செய்திருந்தனர். மண்டல அமைப்பாளர் ஜாகிர் உசேன் நன்றி கூறினார்.