/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தேசிய மின்னணு சட்டசபை செயலி : 9ல் மத்திய அமைச்சர் துவக்கி வைக்கிறார் தேசிய மின்னணு சட்டசபை செயலி : 9ல் மத்திய அமைச்சர் துவக்கி வைக்கிறார்
தேசிய மின்னணு சட்டசபை செயலி : 9ல் மத்திய அமைச்சர் துவக்கி வைக்கிறார்
தேசிய மின்னணு சட்டசபை செயலி : 9ல் மத்திய அமைச்சர் துவக்கி வைக்கிறார்
தேசிய மின்னணு சட்டசபை செயலி : 9ல் மத்திய அமைச்சர் துவக்கி வைக்கிறார்
ADDED : ஜூன் 07, 2025 01:15 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய மின்னணு சட்டப்பேரவை செயல்பாடுகளுக்கான செயலியை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மற்றும் பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சர் முருகன் வரும் 9ம் தேதி துவங்கி வைக்கிறார்.
கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் விழாவில் பங்கேற்கின்றனர். அண்மையில் நிறைவடைந்த புதுச்சேரி சட்டசபையின் 6-வது அமர்வின் போது, கவர்னர் உரை, முதல்வர் பட்ஜெட் உரை, சட்டசபை அலுவல் தொடர்பான பட்டியல், தேசிய மின்னணு செயலி வாயிலாக எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கான பதில்களைப் பதிவேற்றுவதன் மூலம் இந்த மின்னணு செயலியின் சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
எம்.எல்.ஏ.,க்கள், அரசுத் துறைகளின் அதிகாரிகளுக்கு இந்த செயலியை பயன்படுத்துவது தொடர்பாக பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.
தேசிய மின்னணு சட்டசபை செயலி பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பிறகு, புதுச்சேரி சட்டசபை செயல்பாடுகள் அனைத்தும் காகித பயன்பாடற்ற மின்னணு முறையில் இனி நடக்கும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தொடங்கப்பட்ட தேசிய மின்னணு சட்டசபை நடவடிக்கைகளுக்கான செயலி ஒரே நாடு ஒரே செயலி என்ற தொலைநோக்கு பார்வையை உள்ளடக்கியது.
2020ம் ஆண்டு ஜனவரி 15ம் தேதி பொது முதலீட்டு வாரியத்தால் ரூ.673.94 கோடி பட்ஜெட்டில் இந்த செயலிக்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதுவரை, 28 மாநில சட்டசபை இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. அவற்றில் 18 மாநில சட்டசபை டிஜிட்டல் மயமாக்கும் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன.