/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க 15ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க 15ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க 15ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க 15ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க 15ம் தேதி வரை காலக்கெடு நீட்டிப்பு
ADDED : ஜூன் 07, 2025 01:15 AM
புதுச்சேரி: ஐ.டி.ஐ., மூலம் பல்வேறு தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் 15ம் தேதி வரை கால அவகாம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அரசு ஆண்கள் தொழில்பயிற்சி நிலைய முதல்வர் அழகானந்தன் செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை பயிற்சி இயக்குனரகத்தின் கீழ், அரசு ஐ.டி.ஐ.,கள் மூலம் ஆண்டு தோறும் மாணவர்களுக்கு பல்வேறு தொழிற்பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு ஆண்கள் தொழிற்பயிற்சி நிலையத்தில், பிட்டர், எலக்ட்ரீஷியன், ஏ.சி., டெக்னீஷியன், மோட்டார் வாகன மெக்கானிக், ஒயர்மேன், மின்சார வாகன மெக்கானிக், கட்டட பட வரைவாளர், எலக்ட்ரானிக் மெக்கானிக் ஆகிய இரண்டு ஆண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், வெல்டர், கட்டடம் கட்டுபவர், கம்ப்யூட்டர் இயக்குபவர் ஆகிய ஒரு ஆண்டு கால பயிற்சி மற்றும் ட்ரோன் டெக்னீஷியன் 6 மாத கால பயிற்சிக்கு, இந்த ஆண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது.
இந்த பயிற்சி வகுப்பில், சேர பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தவறியவர்களும், எட்டாம் வகுப்பில் தேர்ச்சிப்பெற்ற ஆண், பெண் விண்ணப்பிக்கலாம். கல்வி நிலையத்தில் இருந்து பெறப்பட்ட மாற்றுச்சான்றிதழ் குடியிருப்பு சான்றிதழ் ஆகியவற்றை, https://www.centacpuducherry.in/itiadmission இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தை, நேரில் பெற, அரசு ஆண்கள் தொழில் பயிற்சி நிலையத்தில் பெற்று கொள்ளலாம்.
இந்த தொழில் பயிற்சிக்கு விண்ணப்பிக்க வரும் 15ம் தேதி வரை காலம் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.