/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ.,யில் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ.,யில் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி
மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ.,யில் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி
மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ.,யில் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி
மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ.,யில் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி
ADDED : செப் 16, 2025 06:38 AM
புதுச்சேரி : மேட்டுப்பாளையம் ஐ.டி.ஐ.,யில் தேசிய தொழில் பழகுநர் பயிற்சி முகாம் நாளை நடக்கிறது
இதுகுறித்து புதுச்சேரி மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ. முதல்வர் அழகானந்தம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி அரசு தொழிலாளர் துறை, துணை தொழிலாளர் தொழில் பழகுநர் ஆலோசகர் சார்பில் பிரதம மந்திரி சேர்க்கை முகாம் மேட்டுப்பாளையம் அரசு ஆண்கள் ஐ.டி.ஐ.யில், நாளை 17 ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.
முகாமில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மத்திய, மாநில நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பங்கேற்கிறது. என்.சி.வி.டி., மற்றும் எஸ்.சி.வி.டி., முறையில் அரசு மற்றும் தனியார் ஐ.டி.ஐ.,யில் பயிற்சி பெற்று தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களும் தொழில் பழகுநர் பயிற்சியில் சேர்ந்து தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்று பயனடையலாம்.
மேலும், பயிற்சியில் சேர்பவர்களுக்கு மாதாந்திர ஊக்கத்தொகையாக ரூ.7 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை வழங்கப்படும். முகாமில் பங்கேற்க வரும் ஐ.டி.ஐ., முடித்தவர்கள் என்.சி.வி.டி., சான்றிதழ், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அடையாள அட்டை கொண்டு வரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.