Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அன்னையின் கனவு திட்டம் சட்டப்படி நடக்கிறது ஆரோவில் அறக்கட்டளை தரப்பில் விளக்கம் 

அன்னையின் கனவு திட்டம் சட்டப்படி நடக்கிறது ஆரோவில் அறக்கட்டளை தரப்பில் விளக்கம் 

அன்னையின் கனவு திட்டம் சட்டப்படி நடக்கிறது ஆரோவில் அறக்கட்டளை தரப்பில் விளக்கம் 

அன்னையின் கனவு திட்டம் சட்டப்படி நடக்கிறது ஆரோவில் அறக்கட்டளை தரப்பில் விளக்கம் 

ADDED : ஜன 06, 2024 06:31 AM


Google News
வானூர் : அன்னையின் கனவு திட்டம் சட்டப்படி நடப்பதாக ஆரோவில் அறக்கட்டளை தரப்பில் விளக்கம் அளித்துள்ளனர்.

சர்வதேச நகரமான ஆரோவில்லில், பல்வேறு நாடுகளை சேர்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்குள்ள 'மாத்ரி மந்திர்' பகுதியைச் சுற்றி 50 ஆயிரம் ஆரோவில்வாசிகள் வசிக்கும் வகையில் அன்னையின் கனவு திட்டத்திற்காக விரிவாக்கப்பணிகள் நடந்து வருகிறது.

முதற்கட்டமாக கிரவுன் சாலைத் திட்டத்திற்காக மரங்களை வெட்டும் பணி கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் துவங்கியது. மரம் வெட்டும் பணியை நேற்று முன்தினம் ஆரோவில் வாசிகளில் ஒரு தரப்பினர் தடுக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆரோவில் போலீசார், எதிர்ப்பாளர்களை எச்சரித்து, மரங்களை வெட்ட பாதுகாப்பு அளித்தனர்.

இந்நிலையில் ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு பணி அதிகாரி வஞ்சனவள்ளி, நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜூ, லட்சுமிதரன், சிந்துஜா உள்ளிட்டோர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது;

ஆரோவில் நகரம் மேம்பாட்டு கவுன்சில், மாஸ்டர் பிளான்படி சாலை திட்டங்களை உருவாக்கி வருகிறோம். இதில் 50 சதவீதம் காலியாகவும், 50 சதவீதம் மட்டுமே கட்டடம் அமைத்துள்ளோம். காலியான இடங்களில் அனுமதி பெறாமல் மரங்களை வளர்த்திருந்தனர். அன்னை கனவு கண்ட நகரத்தை உருவாக்குவதற்காகவே இந்த மரங்களை அகற்ற வேண்டியுள்ளது. சட்டப்படி தான் அனைத்து பணிகளும் நடக்கிறது.

மாஸ்டர் பிளானில் இருப்பதை அப்படியே கடைபிடிக்கிறோம். உலகிலேயே கிரீன் சிட்டியாக ஆரோவில் தான் உள்ளது. சோலார் எனர்ஜி, தண்ணீர், இயற்கை என அனைத்தும் இருக்கிறது. அதை செயல்படுத்த விடாமல் இருப்பதில் உள்நோக்கம் உள்ளது. 50 ஆயிரம் பேர் இருக்க வேண்டிய இடத்தில், 2 ஆயிரம் பேர் மட்டுமே உள்ளனர்.

சிலர் சொகுசாக வாழ்வதற்கு, மற்றவர்களை வர விடாமல் தடுக்கிறார்கள். கிரவுன் சாலை திட்டப்பணிகளில் 50 சதவீதம் இயற்கை சூழ்ந்த பகுதி. இது உலகிற்கே மாடல். முழுக்க காடாக இருந்தால், எப்படி கற்க முடியும்.

அன்னை உருவாக்கிய திட்டப்படி, தண்ணீர் மேம்பாடு, சாலை வசதி, கற்கும் இடங்கள் அனைத்தும் இருந்தால் தான் ஆரோவில் நகரமாகும். கட்டடமே பசுமை சூழ்ந்து தான் உருவாக்கியுள்ளோம்.

அன்னை உருவாக்கிய நகரம் காடு அல்ல. அதை பின்னால் வந்த சிலர், தவறான கற்பிதம் செய்துள்னர். ஆரோவில்லில், 4.300 கி.மீ., துாரத்திற்கு நடக்கும் கிரவுன் சாலை திட்டப்பணி இந்தாண்டிற்குள் நிறைவு பெறும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us