/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நகராட்சி மேரி ஹாலில் திருமண பதிவு சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல் நகராட்சி மேரி ஹாலில் திருமண பதிவு சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்
நகராட்சி மேரி ஹாலில் திருமண பதிவு சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்
நகராட்சி மேரி ஹாலில் திருமண பதிவு சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்
நகராட்சி மேரி ஹாலில் திருமண பதிவு சட்டசபையில் எம்.எல்.ஏ.,க்கள் வலியுறுத்தல்
ADDED : மார் 21, 2025 05:47 AM
புதுச்சேரி : சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்;
பி.ஆர்.சிவா (சுயேச்சை): புதுச்சேரி நகராட்சிக்கு சொந்தமான கடற்கரையில் உள்ள மேரி ஹால்முன்பு திருமண வரவேற்பு நடந்து வந்தது. இப்போது அனுமதி வழங்கப்படுகின்றதா.
முதல்வர் ரங்கசாமி: தற்போது பிரெஞ்சு குடியுரிமை சட்டத்தின்படி புதுச்சேரி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் மணமகன் அல்லது மணமகள் பிரெஞ்சு குடியுரிமை பெற்றிருந்தால் அவர்கள் திருமணத்தை பதிவு செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.
பி.ஆர்.சிவா: இந்த அனுமதிக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
முதல்வர் ரங்கசாமி: பிரெஞ்சு திருமண பதிவு அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு கட்டணமாக ரூ. 50,500 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மற்றவர்கள் திருமண வரவேற்பு நடத்துவதற்கு விண்ணப்பித்தால் பரிசீலனை செய்து அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
நேரு(சுயேச்சை): புதுச்சேரி மேரி ஹாலில் காலம் காலமாக திருமணங்கள் நடந்து வந்துள்ளன. பதிவு செய்யப்பட்டன. எனவே அங்குபிரெஞ்சு திருமணம் மட்டுமின்றி மற்றவர்களையும் அனுமதிக்க வேண்டும். பத்திரப்பதிவு துறையில் தற்போது திருமணம் நடந்தாலும் அதிக முக்கியத்துவம் தரப்படுவதில்லை.
நாஜிம் (தி.மு.க): காலம் காலமாக திருமண பதிவுகள் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் நடந்து வந்துள்ளது.
மேரி ஹாலில் திருமணம் செய்ய பொதுமக்கள் ஆர்வம் காட்டினர். பல ஆண்டுகளாக நடந்து வந்த இந்த நடைமுறையை ஏன் மாற்றினர் என்று தெரியவில்லை.
முதல்வர் ரங்கசாமி: எம்.எல்.ஏ.,க்களின் கோரிக்கை தொடர்பாக பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.