/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆலை வளாகங்களில் ஐ.டி., பார்க், ஜவுளி பூங்கா அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு ஆலை வளாகங்களில் ஐ.டி., பார்க், ஜவுளி பூங்கா அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
ஆலை வளாகங்களில் ஐ.டி., பார்க், ஜவுளி பூங்கா அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
ஆலை வளாகங்களில் ஐ.டி., பார்க், ஜவுளி பூங்கா அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
ஆலை வளாகங்களில் ஐ.டி., பார்க், ஜவுளி பூங்கா அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு
ADDED : மார் 21, 2025 05:46 AM
புதுச்சேரி : சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நடந்த விவாதம்:
வெங்கடேசன், அசோக்பாபு (பா.ஜ.,): ஏ.எப்.டி., பாரதி, சுதேசி ஆலைகளை சினிமா படப்பிடிப்புக்கு மட்டும் பயன்படுத்தாமல், ஐ.டி., பார்க் கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைச்சர் நமச்சிவாயம்: இந்த ஆலை வளாகங்களில் ஜவுளி பூங்கா அமைப்பதற்கான தொழில்நுட்ப பொருளாதார சாத்தியக்கூறுகள் குறித்து தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகம் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்த பணி ஓரிருமாதத்தில் நிறைவடையும். அதன்பிறகு ஐ.டி., பூங்கா, ஜவுளி பூங்காக அமைக்கும் பணி குறித்து பரிசீலிக்கப்படும்.
எதிர்கட்சித் தலைவர் சிவா: இந்த ஆலை வளாகங்களில் ஆய்வு செய்து இதுவரை ஒன்றும் நடக்கவில்லை. ஆய்வு கமிட்டிகளால் அரசு குழப்பமாக உள்ளது என்று நினைக்கின்றேன். ரோடியர், சுதேசி, பாரதி, ஸ்பின்கோ என மில் வளாகம் நிறைய உள்ளது. ஒவ்வொன்றிலும் ஒரு திட்டத்தை அமல்படுத்தி பார்க்கலாம்.
அமைச்சர் நமச்சிவாயம்: நம்மிடம் ஏ.எப்.டி., பாரதி, சுதேசி, ஸ்பின்கோ ஆலை வளாகம் உள்ள சூழ்நிலையில் ஜவுளி பூங்கா வந்தால் ஏராளமான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். குறிப்பாக எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை படித்த இளைஞர்கள் வேலை பெறுவர்.
இது தொடர்பாக ஆலையை பார்வையிட்ட கவர்னரிடம் ஆலோசிக்கப்பட்டது. கவர்னர் ஜவுளி ஆராய்ச்சிக்கழக அறிக்கையின்படி அங்கு ஜவுளி பூங்கா அமைப்பது சம்பந்தமாக முடிவெடுக்க கூறியுள்ளார்.
விரைவில் இந்த அறிக்கை கிடைக்கும். இந்த பகுதிகளில் ஏக்தா மால், ஜவுளி பூங்கா, ஐ.டி., பார்க் ஆகியவை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்.
தேசிய பஞ்சாலை கழகத்திடம் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை கொடுத்து, ஆலை இடங்களை திரும்ப பெறவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
இவ்வாறு விவாதம் நடந்தது.