/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ரத்த தான முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு ரத்த தான முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரத்த தான முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரத்த தான முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ரத்த தான முகாம் எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு
ADDED : ஜூன் 24, 2025 04:24 AM

புதுச்சேரி: புதுச்சேரி மனிதநேய மக்கள் சேவை இயக்கம் சார்பில் இந்திரா காந்தி அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம் நடந்தது.
ரத்த தான முகாமை இயக்க நிறுவன தலைவர் நேரு எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். இயக்க பொது செயலாளர் விநாயகம் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் வழங்கினர்.
இதில், ரகோத்தமன், ரஞ்சித்குமார் இயக்க நிர்வாகிகள் செங்குட்டுவன், ரெனோ, சதீஷ், ராஜி, சிவராமன், வினோத், பாலா, சூசை, ஸ்ரீதர், காமராஜ், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை மனிதநேய மக்கள் சேவை இயக்க தினேஷ் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.